Forbesஇன் "30 Under 30 Asia" பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியர்கள்..

ஃபோர்ப்ஸ் நிறுவனம் அவ்வப்போது உலக பணக்காரர்கள் பட்டியல், சிறந்த தொழில்முனைவோர் பட்டியல், சிறந்த தலைவர்கள் பட்டியல் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் "30 Under 30 Asia" பட்டியலின் ஒன்பதாவது பதிப்பை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் 300 இளம் தொழில்முனைவோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 30 வயதுக்குட்பட்ட சிறந்த தொழில்முனைவோராகவும், தலைவராகவும் உயர்ந்தவர்களும், சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வந்தவர்களும் இதில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் விவரங்கள் இதோ:

 Forbesஇன்

நுகர்வோர் தொழில்நுட்ப பிரிவு: இதில் InsideFPV நிறுவனத்தை தொடங்கிய தேவானந்த் பரத்வாஜ், ஆர்த் சவுதி, ஓஷி குமாரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்நிறுவனம் 2020இல் தொடங்கப்பட்ட ட்ரோன் ஸ்டார்ட் அப் ஆகும். ட்ரோன் மாடலை மிகவும் எளிமையாக்கிய நிறுவனம் இது. அதாவது "plug-and-fly" மாடல் ட்ரோன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கன்சியூமர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் ஜார்ஜ் ஃபிரான்ஸிஸ் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார் . பெங்களூருவை அடிப்படையாக கொண்ட இந்த நிறுவனம், அண்மையில் மனிதர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் 5 கிராம் எடை கொண்ட ஸ்மார்ட் மோதிரத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

Orma AI நிறுவனத்தின் இணை நிறுவனர் குஷ் ஜெயின் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையை எளிமையாக கற்றுக் கொள்வதற்காக இந்நிறுவனம் ஸ்மார்ட் கையுறையை கண்டுபிடித்தது.

OnePlay நிறுவனத்தின் ஹர்ஷித் ஜெயின், அமிப் சாஹா ஆகியோருக்கும் இதில் கௌவுரம் அளிக்கப்பட்டுள்ளது. 2019இல் தொடங்கப்பட்ட இந்த கேமிங் ஸ்டார்ட் அப் , அனைத்து கேமிங் தளங்களையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறது.

தொழில், உற்பத்தி மற்றும் ஆற்றல்: Static நிறுவனத்தின் அக்சித் பன்சால், ராகவ் அரோரா ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இந்நிறுவனம் நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நிறுவி வருகிறது. இதன் மூலம் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Race Energy நிறுவனத்தின் கௌதம் மகேஸ்வரன், அருண் ஸ்ரேயாஸ் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்நிறுவனம் ஆட்டோக்களுக்கான எளிதில் மாற்றத்தகுந்த பேட்டரிகளை தயாரித்து வருகிறது.

நிதித்துறை: Blackstone நிறுவனத்தின் உறுப்பினர் அனிகேட் டாம்லே இந்த பட்டியில் உள்ளார். இவர் இந்நிறுவனத்தின் முதலீடுகளில் தெற்காசியாவில் ஆட்டோமோட்டிவ், வாடிக்கையாளர், தொழில் துறை ஆகியவற்றை மேலாண்மை செய்து வருகிறார்.

Transq நிறுவனம் NFT மற்றும் கிரிப்டோ கரன்சிகளுக்கான பேமெண்ட் கேட்வேயாக செயல்படுகிறது. அதாவது இவற்றை எளிய முறையில் வாங்க உதவுகிறது. இதன் இணைநிறுவனர் யேசு அகர்வால் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை ஸ்டார்ட் அப் Duetஇன் நிறுவனர்கள் ஸ்ரீனிவாஸ் சர்கார், குஷாக்ரா மங்கிலிக் , கபல் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர். தம்பதிகள் தங்களின் நிதி மேலாண்மையை திறம்பட கையாள இந்த நிறுவனம் உதவுகிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+