செயற்கை நுண்ணறிவு (AI) உலகளாவிய வேலை சந்தையை மறுவடிவமைத்து வருவதால், காங்னிசண்ட் (Cognizant) நிறுவனம் தனது புதிய பணியாளர்கள் சேர்க்கையை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு மேலும் பல கல்லூரி மாணவர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பாரம்பரிய தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தாண்டி, தற்போது கலை மற்றும் சமூக அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது பெருநிறுவன வேலைவாய்ப்பைக் குறைப்பதற்குப் பதிலாக, அதை இன்னும் விரிவாக்கும் என்று ரவி குமார் உறுதியாக கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு என்பது மனித திறனை மேம்படுத்தும் ஒரு ஊக்கி மட்டுமே. இது வேலை நீக்கத்திற்கான உத்தி அல்ல என்று அவர் ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார். காங்னிசண்ட் நிறுவனம் தற்போது மானுடவியல் (Anthropologists), சமூகவியல், உளவியல் மற்றும் இதழியல் போன்ற STEM அல்லாத பட்டதாரிகளை ஆர்வத்துடன் தேடி வருகிறது.
தகவல்கள் மிக எளிதாக கிடைக்கக்கூடிய இன்றைய உலகில், நிபுணத்துவம் மற்றும் சிறப்பான அறிவு ஆகியவை எவ்வாறு இன்னும் உயர்ந்ததாக கருத முடியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு விஷயத்தில் நிபுணத்துவம் பெறுவது எளிதாகிவிட்டால், நிபுணத்துவம் என்பது ஒரு சிறப்புத் தகுதி அல்ல. மாறாக, அந்த அறிவாற்றலைப் பயன்படுத்துவதுதான் இப்போதைய சிறப்புத் தகுதி" என்று அவர் கூறியுள்ளார்.
மாணவர்கள் தங்கள் திறமைகளை ஒரு பாடத்திட்டத்திற்குள் மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், பல்துறைத் திறன்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று எஸ்.ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார். உதாரணத்துக்கு, வரலாற்றை நன்கு அறிந்த ஒருவர், கணக்கீட்டுத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலவியலாளராக மாறலாம் என்றும், உயிரியல் மாணவர்கள் AI-ஐப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிப்பு சுழற்சியை விரைவுபடுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், டிஜிட்டல் திறன்களால் சமுதாயத்தில் ஒரு பெரிய பிளவு உருவாகி வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். டிஜிட்டல் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் அதிக லாபம் சம்பாதித்தார்கள். ஆனால் அதைப் பயன்படுத்தியவர்களுக்குச் சில வசதிகள் மற்றும் தகவல்கள் மட்டுமே கிடைத்தன. இது மக்களுக்கு இடையே பாலத்தை உருவாக்கவில்லை. திறன் உள்ளவர்கள் மேலும் முன்னேற, திறன் இல்லாதவர்கள் பின்தங்கிவிட்டனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, செயற்கை நுண்ணறிவின் வருகைக்குப் பிறகும் மனிதத் திறன்களின் முக்கியத்துவம் குறையாது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒரு வேலையின் ஆரம்பம், அதாவது சிக்கலை கண்டறிதல், கருத்தாக்கம் செய்தல் போன்றவை மனிதர்கள் கையில் உள்ளன. இதில் ஏஐ-யின் வேலையும் இருக்கிறது. ஆனால், வேலையின் இறுதிக் கட்டமான மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு நிச்சயமாக மனிதர்கள் தேவை" என்று கூறியுள்ளார்.
மேலும், பட்டதாரி மாணவர் சேர்க்கையுடன் சேர்த்து, காங்னிசண்ட் நிறுவனம் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பயிற்சித் திட்டங்களை நடத்துவதாகவும், இடைக்காலப் பணியாளர்களை ஆதரிப்பதற்காக மெரிட் அமெரிக்கா போன்ற நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications