சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சேவை துறையானது பெரும் சவாலான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக ஐடி துறையானது மிகப்பெரிய சிக்கலை எதிர்கொண்டு வருகின்றது. இன்றும் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி வரும் ஐடி துறையானது, சமீபத்திய மாதங்களாகவே பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில், அதன் தாக்கத்தினை ஐடி துறையும் எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக இந்திய ஐடி துறையில் இதன் தாக்கம் மிக அதிகம் எனலாம்.
சர்வதேச நிறுவனங்கள் பாதிப்பு
ஒரு புறம் புதிய பணியமர்த்தலை குறைத்து வரும் நிறுவனங்கள், சம்பள அதிகரிப்பு உள்ளிட்டவற்றை தற்காலிகமாக குறைத்து வருகின்றது. பல்வேறு டெக் ஜாம்பவான்களும் தேவைப்பட்டால் பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியும் இல்லை என எச்சரிக்கை விடுத்து வருகின்றன.
ஐடி ஊழியர்கள் ஷாக்
இதற்கிடையில் ஐடி ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர் எனலாம். ஏனெனில் இருக்கும் வேலை தொடருமா? அல்லது பணி நீக்கம் வருமா? நிறுவனம் அடுத்து என்ன செய்யும்? பிரச்சனைகளை சமாளிக்க ஏற்கனவே பல்வேறு வகைகளிலும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டன.
இண்டர்வியூவில் தேர்வு
தற்போது இந்த மந்த நிலைக்கு மத்தியில் மற்றொரு பிரச்சனை பூதாகரமாக கிளம்பியுள்ளது. கொரோனா காலத்தில் ஐடி துறையில் பற்பல திட்டங்களில் ஐடி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வந்த நிலையில், பணியமர்த்தலை பெரியளவில் செய்து வந்தன. இந்த போக்கு இன்னும் சில காலாண்டுகளுக்கு தொடரலாம் என்ற நிலையில், பல பிரஷ்ஷர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களை பணியில் அமர்த்திக் கொள்ள திட்டமிட்டன.
ஏன் இந்த முடிவு?
இதன் காரணமாக இண்டர்வியூ மூலம் பல ஆயிரம் பேரை தேர்வு செய்து, அவர்களை எந்த திட்டங்களிலும் பயன்படுத்தாமல் வைத்திருந்தன. இந்த பிரச்சனையானது சமீபத்திய காலமாக தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. மிகப்பெரிய திட்டங்களை சரியான நேரத்தில் முடித்துக் கொடுக்க வேண்டும். அது ஆட்பற்றாக்குறையால் தடைபடக்கூடாது என நிறுவனங்கள் இத்தகைய முடிவினை எடுத்துள்ளன.
வேலையே இல்லை
ஆனால் தற்போதுள்ள நிலையில் வேலையில் இருப்பவர்களுக்கே வேலை இல்லாமல், பணி நீக்கம் செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதற்கு மத்தியில் தான் இண்டர்வியூவில் தேர்வானவர்களை பணியில் அமர்த்தாமல், காலம் தாழ்த்தி வந்தது. இதில் பிரெஷ்ஷர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் என பலரும் அடங்குவர்.
EPAM சிஸ்டம்ஸ் அதிரடி முடிவு
அந்த வகையில் NYSE-ல் பட்டியலிடப்பட்டுள்ள ஐடி சேவை நிறுவனமான EPAM சிஸ்டம்ஸ் சுமார் 100 இந்திய ஊழியர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் பெரும்பாலும் பெஞ்ச்மார்க் ஊழியர்களாகவும்., இவர்கள் எந்த திட்டத்திலும் இதுவரையிலும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. அதோடு அடுத்த சில மாதங்களில் பணியில் சேரவிருப்பவர்களின் கடிதங்களையும் திரும்ப பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ராஜினாமா செய்யுங்கள்
எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை எனலாம். இது குறித்து நிறுவனங்கள் தரப்பில் தேவை அதிகரிக்கலாம் என்ற தவறான கணிப்பினால், நிறுவனங்கள் அதிகளவில் பணியமர்த்தியதும், ஆனால் எதிர்கால திட்டங்களுக்காக செலவு செய்ய விரும்பவில்லை என்று கூறி, ராஜினாமா செய்ய கூறுவதாகவும் தெரிகிறது.
மைக்ரோசாப்ட்டின் முடிவென்ன?
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அதன் சில ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியத்தினை பெற்றுக் கொண்டு உடனடியாக வெளியேறலாம் என்ற கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு இரண்டு மாத நோட்டீஸ் வழங்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் திட்டங்கள் கிடைத்தால் அவர்களுக்கான ராஜினாமா அறிவிப்பானது ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐடி நிறுவனங்களின் இந்த போக்கினை பல நிறுவனங்களும் தொடரலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications