பலர் தங்களது EPF கணக்கிலிருந்து பணத்தை பெற விண்ணப்பித்த பிறகு, கிளைம் தீர்க்கப்பட்டுவிட்டதாக போர்ட்டலில் காட்டப்பட்டாலும், தொகை வங்கி கணக்கிற்கு வரவில்லை என்ற பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இது போன்ற தவறுகள் நடப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னென்ன காரணங்கள் என்பது குறித்தும், இதுபோன்ற சூழ்நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் விரிவாக இந்தப் பதிவில் பார்ப்போம்.
சில நேரங்களில் EPF கிளைம் "Settled" என்பது போல காட்டப்பட்டாலும், உறுப்பினரின் வங்கி கணக்குக்கு PF தொகை வந்திருக்காது. இதுபோன்ற சூழ்நிலைகளில் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

NEFT பரிமாற்ற அட்டவணையை மதிப்பாய்வு செய்யவும்: PF பொதுவாக NEFT (National Electronic Funds Transfer) மூலம் உறுப்பினரின் வங்கி கணக்குக்கு மாற்றப்படும். எனவே உங்கள் வங்கியின் NEFT அட்டவணைகளைச் சரிபார்க்கவும். வங்கி விடுமுறை நாட்களில் NEFT பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமானால் NEFT பரிமாற்றங்கள் திங்கள் முதல் வெள்ளி வரையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்படும். அதுவே சனிக்கிழமை என்றால் காலை 8 மணி முதல் மதியம் 1 மணியோடு இந்த சேவை நிறுத்தப்படும். இதுபோல ஒவ்வொரு வங்கிக்கும் தனிப்பட்ட நேர அட்டவணை உள்ளது.
தவறான வங்கி விவரங்கள்: தவறான வங்கி விவரங்கள் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். UAN போர்ட்டலில் Manage -> KYC என்பதற்குச் சென்று, உங்கள் வங்கி விவரங்களைச் சரிபார்க்கவும்.
பிழைகள் கண்டறியப்பட்டால், உங்கள் வங்கி விவரங்களை உடனடியாகப் புதுப்பித்து, ரத்து செய்யப்பட்ட காசோலை உட்பட, EPFO அலுவலகத்தில் மறு அங்கீகாரக் கடிதத்தை சமர்ப்பிக்கவும். திருத்தங்கள் மற்றும் மறு செயலாக்கத்திற்கு 10 முதல் 15 நாட்கள் ஆகலாம்.
EPFO குறைதீர்ப்புக் குழுவில் புகார் அளிக்கவும், சிக்கல் தொடர்ந்தால், ஆன்லைனில் EPFO குறைதீர்ப்புப் பிரிவில் புகார் அளிக்கவும். EPFO Grievance Portal மூலம் புகார்களை பதிவு செய்து அங்கு கண்காணிக்கலாம். இல்லையேல் சமூக ஊடகங்கள் வழியாக EPFO அமைப்பை தொடர்புகொள்ளலாம்.
PF கிளைம் ஸ்டேட்டஸ்-ஐ ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது: ஆன்லைன் மூலம் EPF கிளைம் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கும் முன், ஊழியர்கள் தங்கள் EPF கணக்கிலிருந்து பணம் எடுப்பது தொடர்பான கோரிக்கையை EPFO-க்கு டிக்கெட் மூலம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் EPF உறுப்பினர்கள் பின்வரும் முறையைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்கள் EPF ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.
ஸ்டெப் 1: அதிகாரப்பூர்வ EPFO போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: "Our services" என்பதைக் கிளிக் செய்து, "For Employees" ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: அடுத்து, வெப்பேஜின் திரையின் கீழே ஸ்க்ரோல் செய்து, இடது புறத்தில் உள்ள "Services" பிரிவின் கீழ் உள்ள "Know Your Claim Status" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: பாதுகாப்பு காரணங்களுக்காக "Get redirected to Member Passbook application" என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 5: அதன் பின் நீங்கள் கேப்ட்சா, UAN நம்பர் ஆகியவற்றை என்டர் செய்து, "Search" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 6: அடுத்து, உங்கள் PF அலுவலகத்தின் மாநிலம் மற்றும் மெனுவிலிருந்து உங்களின் தற்போதைய PF அலுவலகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 7: உங்கள் PF கணக்கு எண்ணை என்டர் செய்யவும்.
ஸ்டெப் 8: இப்போது, "Submit" என்பதைக் கிளிக் செய்யவும், உங்கள் EPF ரெக்வஸ்ட் ஸ்டேட்டஸ் திரையில் காண்பிக்கப்படும்.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications