தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக்கூடிய கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வு காலத்தில் நிதி ரீதியான பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் தான் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம். ஈபிஎஃப்ஓ (epfo) அமைப்பு தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
ஒவ்வொரு தொழிலாளரின் பெயரிலும் பிஎஃப் கணக்கு தொடங்கப்படுகிறது. ஊழியர் , அந்த ஊழியரின் நிறுவனம் ஆகிய இரண்டு தரப்பிலும் பிஎஃப் கணக்கில் மாதம் தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது. சம்பளத்தில் ஒரு கணிசமான தொகை பிடித்தம் செய்யப்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு மத்திய அரசு சார்பாக வட்டி வழங்கப்படுகிறது.

ஊழியர் பணி ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருந்து ஒரு மொத்த தொகை கிடைக்கும். இடைபட்ட காலத்தில் அவசர பணத் தேவை ஏற்பட்டாலும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது மத்திய அரசு பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு 8.25% வட்டியை வழங்குகிறது.
இந்த வட்டியை இன்னும் அதிகப்படுத்தினால் தொழிலாளர்கள் தாமாக முன் வந்து மேலும் அதிகமான பணத்தை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்வார்கள் எனவே அரசு பிஎஃப் வட்டியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அரசு பிஎஃப் வட்டியை 10 சதவீதமாக உயர்த்துமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே வட்டி விகிதத்தை 10% உயர்த்த வேண்டுமென தொழிலாளர் யூனியன் தரப்பிலிருந்து குறிப்பிடத்தகுந்த எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை முன்வைக்கப்படவில்லை எனக் கூறியிருக்கிறார்.
தற்போதைக்கு 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிலிருந்து பிஎஃப் கணக்கிற்கு 8.25% வட்டி வழங்கப்பட்டு வருகிறது என கூறி இருக்கும் அவர் ஈபிஎஃப்ஓ அமைப்பின் வாரிய குழு அறங்காவலர்களால் தான் வட்டி விகிதமே முடிவு செய்யப்படுகிறது என கூறியுள்ளார். இந்த அறங்காவலர் குழுவில் அரசு பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான பிரதிநிதிகள் என அனைவருமே இருக்கிறார்கள். இவர்கள் கலந்தாலோசித்து தான் வட்டி விகித முடிவையே எடுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
பிஎஃப் வட்டியை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொழிலாளர் யூனியன்களால் முன்வைக்கப்படவில்லை அரசிடமும் அப்படி ஒரு திட்டம் தற்போதைக்கு பரிசீலனையில் இல்லை எனக் கூறியிருக்கிறார். எனவே தற்போது பிஎஃப் வட்டி உயர்த்தப்படாது என்பது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications

