இன்றைய காலகட்டத்தில் ஓய்வூதிய திட்டங்கள் பல உள்ளன. மக்கள் பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் மற்ற எல்லா திட்டங்களையும் விட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) என்பது மிகச் சிறந்த திட்டமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்த சேமிப்பு திட்டத்தில் சேமிப்புடன் வரிச்சலுகையும் கிடைக்கிறது. அதெல்லாம் சரி மற்ற திட்டங்களை காட்டிலும் எப்படி சிறந்தது.
வரிச்சலுகை என்ன? மற்ற திட்டங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
வரிச் சலுகை
பொதுவாக இந்த இபிஎஃப் திட்டத்தில் வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. இதனால் தான் இந்த திட்டம் மிகச் சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 8.50% ஆக உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் கூட்டு வட்டியும் கொடுக்கப்படுகிறது.
சலுகைகள்
இந்த திட்டத்தில் மற்ற திட்டங்களை காட்டிலும் வட்டி விகிதமும் அதிகம். வரிச்சலுகையும் உண்டு. இதில் முதலீடு பெருக பெருக வட்டியும் அதிகமாக கிடைக்கும். மேலும் வேலையை மாற்றிய பிறகும் கூட, இதனை தொடர முடியும். எனினும் பிஎஃப் சந்தாதாரர்கள் அடிக்கடி இந்த நிதியினை இடையில் திரும்ப பெறுவதன் மூலம், இதில் கிடைக்கும் நன்மைகள் குறைகிறது.
வரி சலுகையுடன் பிஎஃப்
நீங்கள் இடையில் பணத்தை வித்டிரா செய்யாமல், ஓய்வூகாலத்திற்கு தொடரும்பட்சத்தில் உங்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் ஏராளமான சலுகைகள் கிடைக்கின்றன. அதேசமயம் உங்கள் ஓய்வுகாலத்திற்கு கிடைக்கும் பணத்திற்கு வரிச்சலுகையையும் பெற முடியும்.
யார் தகுதியானவர்கள்?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO )ஆல் நடத்தப்படும் ஊழியர் ஓய்வூதிய திட்டம் (EPF), ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உதவுகிறது. எனினும் குறைந்தபட்சம் பத்து வருடங்களாக EPF க்கு பங்களிப்பு செய்து வரும் ஊழியர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். விண்ணப்பதாரர் 58 வயதை எட்டும்போது, இந்த திட்டத்தில் மாத ஓய்வூதியத்தை உருவாக்கத் தொடங்குகிறது.
ஓய்வூதிய சேவை
தேவையான குறைந்தபட்ச சேவை காலத்திற்கு முன், அதாவது 10 வருடங்கள் சேவை செய்வதற்கு முன் ஒரு நபர் EPS திட்டத்திலிருந்து விலகினால், EPF திட்டத்திற்கான பங்களிப்பு புதுப்பிக்கப்பட வேண்டும். உறுப்பினரின் உண்மையான சேவை காலம் ஓய்வூதிய சேவை என்று அழைக்கப்படுகிறது. ஓய்வூதிய சேவை காலத்தை நிர்ணயிக்கும் போது, பல்வேறு நிறுவனங்களின் சேவை காலங்கள் ஒன்றாக சேர்க்கப்படுகின்றன. ஒரு ஊழியர் ஏற்கனவே இருக்கும் வேலையை மாற்றும்போது, அவர் ஒரு EPS திட்டச் சான்றிதழைப் பெற்று தனது புதிய நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications