EPFO: அதிகரிக்கப் போகும் PF சம்பள வரம்பு.. ஊழியர்களுக்கு அரசு தந்த சர்ப்ரைஸ்!

இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் நிதி நலனைக் கருத்தில் கொண்டு அரசு ஒரு மாற்றத்தைக் கொண்டுவர பரிசீலித்து வருகிறது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் இணைவதற்கான சம்பள வரம்பை தற்போது இருக்கும் 15,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாக உயர்த்த ஆலோசனை நடந்து வருகிறது. இந்தத் திட்டம் முறையாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட பிறகு அதன் முழு விவரங்கள் தெரியவரும். ஒரு வேலை இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்கள் பயனடைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

EPFO: அதிகரிக்கப் போகும் PF சம்பள வரம்பு!

கேட்பதற்கு என்னவோ இந்த செய்தி சாதரணமாகத் தோன்றலாம். ஆனால் இது போன்ற அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இதுவரையில் இபிஎப் திட்டங்களின் கீழ் இணையாத பல புதிய ஊழியர்கள் அரசின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இதனால் பென்ஷன், காப்பீடு போன்ற பல வசதிகள் கிடைக்கும், அதோடு ஒவ்வொரு ஊழியரும் தங்கள் மாத சம்பளத்தில் இருந்து பங்களிக்கும் தொகையாகட்டும், அதேபோன்று அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து கொடுக்கப்படும் பங்களிப்பாகட்டும் அனைத்தும் உயரத் தொடங்கும்.

இது போன்ற திட்டங்கள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் மாத சம்பளக்காரர்களுக்கு தங்கள் கைக்கு வரும் சம்பளம் சற்று குறைவாகத் தோன்றலாம். ஆனால் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

ஊழியர்களுக்கு ஏற்படப்போகும் மாற்றங்கள்: இதுவரையில் இபிஎஃப்ஓ அமைப்பின் கீழ் இணையாத ரூ.15,000 ரூபாயிலிருந்து ரூ.25,000 வரை சம்பளம் பெறும் ஊழியர்கள் ஓய்வூதிய திட்டத்தில் இணைவார்கள். இதற்கு முன்னர் பல ஊழியர்கள் தாங்கள் அரசு நிர்ணயித்த தொகைக்கு சற்று அதிகமாக சம்பளம் வாங்கும் பட்சத்தில் PF மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களில் சேராமல் இருந்து வந்தனர். இக்காரணத்தினால் பல ஊழியர்களுக்கு சேமிப்பு பழக்கமே இல்லாமல் போனது. இப்போது இந்த வரம்பை அரசு ரூ.25,000 ஆக உயர்த்த திட்டமிடுகிறது. இதனால் ரூ. 15,000 முதல் ரூ.25,000 வரை சம்பளம் வாங்கினாலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் EPF திட்டத்தின் கீழ் இணைவார்கள்.

சம்பள வரம்பு உயர்ந்தால் உங்கள் கைக்கு கிடைக்கும் சம்பளம் மற்றும் பிஎஃப் சேமிப்பில் என்னென்ன மாற்றம் நிகழும்? என்பதை விரிவாகப் பார்ப்போம். தற்போதைய சம்பள வரம்பின் கீழ் உங்கள் சம்பளம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி உதாரணத்திற்கு நீங்கள் மாதம் ரூ.20,000 சம்பளம் பெறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தற்போது உங்கள் பிஎஃப் என்பது அரசு நிர்ணயித்துள்ள ரூ.15,000 என்ற வரம்பின் அடிப்படையிலேயே நிர்ணயம் செய்யப்படும்.

அப்படியானால் உங்களுடைய பிஎஃப் பங்களிப்பு 15,000 ரூபாயில் 12 சதவீதம் ரூ.1800 ஆக இருக்கும். நீங்கள் சம்பளத்தில் ரூ.1800 செலுத்த வேண்டும். அதேபோல உங்கள் நிறுவனமும் ரூ.1800 பங்களிப்புச் செய்யும். இதனால் மொத்த பங்களிப்பு ரூ.3600-ஆக இருக்கும்.

புதியவரம்பு நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும்?: ஒரு வேளை அரசு 25,000 ரூபாயாக சம்பள வரம்பை உயர்த்தினால் நீங்கள் பெரும் சம்பளத்திலிருந்து அப்படியே 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக நீங்கள் ரூ.20,000 சம்பளம் பெறுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் உங்கள் தரப்பில் 12 சதவீதம் என்றால் நீங்கள் ரூ. 2,400 பங்களிப்பு செய்ய வேண்டும். அதேபோல உங்கள் நிறுவனமும் ரூ.2,400 பங்களிப்புச் செய்யும். இதனால் ஒவ்வொரு மாதமும் ரூ. 4800 வரையில் உங்கள் கணக்கில் சேரும்.

ஆனால் சிலருக்கு கைக்கு கிடைக்கும் சம்பளம் ரூ.600 குறைகிறதே என்ற கவலை எழலாம். 600 ரூபாய் குறைந்தாலும் எதிர்கால நன்மைக்கு நிச்சயம் இதுபோன்ற திட்டங்கள் பயனளிக்கும். தொழிலாளர்கள் இது போன்ற திட்டங்களுக்கு வரவேற்பு தருகின்றனரா? இல்லையா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சம்பளம் வரம்பு உயர்வு என்பது தற்கால பொருளாதாரச் சூழலுக்கு நிச்சயம் தேவையான ஒரு மாற்றம் என்றே சொல்லலாம். பணவீக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் காரணத்தினால் மாத சம்பளத்தில் ஒரு சிறு தொகையாவது பிற்கால சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளை வழங்கும் என்பதில் ஐயமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+