இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளதாக, கடந்த சில மாதங்களாகவே கூறப்பட்டு வரும் வேளையில் EPFO அமைப்பின் டேட்டா பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் சேரும் புதிய உறுப்பினர்கள் அக்டோபர் மாதத்தில் 772,000 ஆகக் குறைந்துள்ளனர், இது நடப்பு நிதியாண்டில் மிகக் குறைவான அளவாகும்.

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் வலுவான பண்டிகை கால வர்த்தகம், டிமாண்ட் இருந்தபோதிலும் குறைவான வேலைவாய்ப்பு பதிவாகியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
EPFO வேலைவாய்ப்பு தரவுகள் மிகவும் முக்கியமான டேட்டா-வாக பார்க்க காரணம் உண்டு, இந்த தரவுகள் தான் நாட்டின் வகைப்படுத்தப்பட்ட துறையின் (formal sector) வேலைவாய்ப்பு உருவாக்குதலை அளவிடும் குறியீடாக உள்ளது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்கீட்டை வகிக்கும் வகைப்படுத்தப்பட்ட துறையின் வளர்ச்சியை கணக்கிட முடியும்.
அக்டோபர் 2022 அளவை ஒப்பிடுகையில் 6.07% அதிகமான ஊழியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர், ஆனால் செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 16.7% வீழ்ச்சியாகும். பொதுவாக வேலைவாய்ப்பு எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் என்பதால் மாதாந்திர வித்தியாசம் வேலைவாய்ப்பு சந்தையின் தொடர் வளர்ச்சியை காட்டும். இதேபோல் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வருடாந்திர வளர்ச்சி அளவீடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அக்டோபர் மாதத்திற்கு முன், EPFO தளத்தின் தரவுகள் படி புதிதாக பணியில் சேர்ந்தவர்கள், அதாவது புதிகாக ஈபிஎப்ஓ கணக்கை திறந்தவர்கள் எண்ணிக்கை பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 800,000-க்குக் கீழே இருந்தது. ஆனால் இதற்கு பின்பு சரிவில் இருந்து மீண்டு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் சேர்ந்த காலமும் இருந்தது.
இதேவேளையில் இந்தியாவின் ஸ்டாஃபிங் பெடரேஷன் வெளியிட்ட தரவுகள் படி ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் பிளெக்சி ஸ்டாபிங் துறை 5.9 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜூலை காலாண்டில் இது 12.6 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 4 மாதத்தில் புதிதாக பணியில் சேர்வோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications