மாத சம்பளக்காரர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த EPFO அமைப்பின் 2 நாள் கூட்டத்தின் முடிவில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கு பிஎப் டெபாசிட் தொகைக்கு 8.15 சதவீதம் அடிப்படையில் வட்டி வருமானம் அளிக்கப்பட உள்ளதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதத்தை 8.10% என்று மத்திய அரசு நிர்ணயம் செய்த நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டுக்கு வெறும் 0.05 சதவீதம் அதிகரித்து 8.15 சதவீதம் வட்டி வருமானம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
பிஎப் கணக்கு மீதான 8.1 சதவீதம் வட்டி விகிதம் 1977-1978 க்குப் பிறகு மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இந்த 40 ஆண்டு கால குறைவான வட்டி விகிதம் பெரிய அளவில் உயர்த்தப்படும் என அனைத்து தரப்பு மாத சம்பளக்காரர்களும் எதிர்பார்த்த நிலையில் வெறும் 0.05 சதவீத உயர்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாத சம்பளக்காரர்கள்
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மாத சம்பளக்காரர்களின் ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்காக, EPFO அமைப்பின் மத்திய கருவூல குழு திங்கள்கிழமை டெல்லியில் அடுத்த இரண்டு நாள் முக்கியமான கூட்டத்தை துவங்கியுள்ளது.
8.15 சதவீத வட்டி
இக்கூட்டத்தின் முடிவில் தான் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை 8.15 சதவீதம் நிர்யணம் செய்யப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பரிந்துரையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்பதல் பெற்ற பின்பு நடைமுறைக்கு வரும்.
பூபேந்தர் யாதவ்
மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO, டிரஸ்டீஸ் அமைப்பு (CBT), 2022-23 நிதியாண்டிற்கான உறுப்பினர்களின் கணக்குகளில் EPF தொகைக்கு 8.15 சதவீத வருடாந்திர வட்டி வருமானம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.
நிதி அமைச்சகம்
நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு வட்டி விகிதம் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும், அதைத் தொடர்ந்து EPFO வட்டி விகிதத்தை சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கும் என்று அது கூறியது.
EPFO அமைப்பு
இந்த கூட்டம் ஒவ்வொரு ஆண்டு EPFO அமைப்பின் முதலீட்டு லாபத்தில் இருக்கும் லாபத்தை பொருத்து இதன் வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது. மேலும் இந்த EPFO அமைப்பின் மத்திய கருவூல குழுவின் முடிவுகளை மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
EPFO அமைப்பு
EPFO அமைப்பு கடந்த ஆண்டுக்கான வட்டி வருமானத்தை 98 சதவீத வாடிக்கையாளர்களுக்கு டெபாசிட் செய்துள்ள நிலையில், 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான 8.15 சதவீத வட்டிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட உடன் அடுத்த சில வாரத்தில் டெபாசிட் செய்யப்பட துவங்கும்.
அதிகப்படியான வட்டி விகிதம்
கடந்த 10 வருடத்தில் 2015-16 ஆம் நிசியாண்டில் 8.8 சதவீதம் வட்டி வருமானம் அளிக்கப்பட்டது. 2013-14 ஆம் அண்டில் அதிகப்படியாக 8.75 சதவீத வட்டி தொகையை அறிவித்தது, 2012-13ல் 8.5 சதவீத வட்டி தொகை அறிவிக்கப்பட்டது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications