ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தங்கள் உறுப்பினர்களின் நலனுக்காக புது புது மாற்றங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி PF தொகை எவ்வளவு சேர்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள இனி கம்ப்யூட்டர் சென்டருக்கோ அல்லது EPF அலுவலகத்திற்கோ அலையத் தேவையில்லை. வாட்சப்பில் சில நிமிடங்களில் தெரிந்து கொள்ளலாம். EPFO அமைப்பு தங்களுடைய சேவைகளை டிஜிட்டலுக்கு மாற்ற முயற்சி செய்து வருகிறது. இனி வரும் காலங்களில் வாட்ஸப் வசதிக்குக் கூடுதலாக ஏடிஎம் வசதி, யுபிஐ வசதி போன்றவற்றை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பில் என்னென்ன சேவைகள் கிடைக்கும்?: பிரதான் மந்திரி விக்ஸித் பாரத் ரோஜ்கார் யோஜனா (PMVBRY) என்ற திட்டத்தின் கீழ் உள்ள இபிஎஃப்ஓ உறுப்பினர்களுக்கு ஆதார் ஆதன்டிகேஷன் மற்றும் DBT டிரான்ஸ்பர் போன்ற சேவைகளில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அதை வாட்ஸ்அப் மூலமாகவே சரி செய்து கொள்ளலாம். இதற்கு கூடுதலாக உங்களுடைய PF பேலன்ஸ், கடைசி ஐந்து பரிவர்த்தனை விவரங்கள் அதாவது ட்ரான்ஷாக்ஷன் ஹிஸ்டரி மற்றும் நீங்கள் செய்த க்ளைம் விண்ணப்பத்தின் ஸ்டேட்டஸ் போன்றவற்றையும் எளிதாக பார்க்க முடியும்.
இன்றெல்லாம் ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதோடு வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களும் அதிகமாக உள்ளனர். எனவே இதுபோன்ற வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்துவது EPF அலுவலகங்களுக்கு நேரில் சென்று சேவை பெறுவதையும், வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு வரும் அழைப்புகளை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PF சேவை பெறுவதில் சில சிக்கல்கள் இருந்து, பிறரின் உதவியை நாடும் EPFO உறுப்பினர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என இபிஎஃப்ஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் தங்களுடைய தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப்-பை நம்பியுள்ளனர். பயனர்கள் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் நம்பருக்கு "Hello" என்று மெசேஜ் செய்யலாம்.
பாதுகாப்பைப் பற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் EPFO அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் இபிஎப்-ன் அதிகாரப்பூர்வ வாட்ஸப் நம்பரில் பச்சை நிற டிக் மார்க் காண்பிக்கும். அதன் பின் பயனர் "ஹலோ" என்று மெசேஜ் செய்தால் தானியங்கி முறையில் உடனுக்குடன் பதில் கிடைக்கும். மேலும் அனைத்து உறுப்பினர்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் உள்ளிட்ட பிற உள்ளூர் மொழிகளிலும் இந்தச் சேவை கிடைக்கும் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
சேவைகளை எளிதாக்குவது மட்டுமின்றி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கவும் EPFO அமைப்பு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 2024-ஆம் ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதி இருந்த பென்டிங் வழக்குகளின் எண்ணிக்கை 4936. இந்த வழக்குகள் 2026-ஆம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்குள் 2646-ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் ஒவ்வொரு pf உறுப்பினர்களுக்கும் ஏடிஎம் கார்டு வழங்கி, அவர்கள் ஏடிஎம் மூலமாகவே தங்கள் பிஎப் பணத்தை எடுக்கும் நடவடிக்கையையும் EPFO அமைப்பு எடுத்து வருகிறது. நீண்ட காலமாக இந்த கிளைம் கோரிக்கையை செயல்படுத்துவது சிக்கலான ஒன்றாகவே இருந்தது. இதனால் அவதிக்குள்ளான உறுப்பினர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் ஏடிஎம் கார்டு வசதி மற்றும் யுபிஐ வசதியும் விரைவில் அறிமுகமாகிறது.


Click it and Unblock the Notifications