EPFO 3.0: வரப்போகுது! வரப்போகுது! இனி PF பணத்தை ஏடிஎம் கார்டில் எடுக்கலாம்! எந்த மாதம் முதல் தெரியுமா?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் விரைவில் தங்களுடைய பிஎஃப் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் வாயிலாக பெற இருக்கின்றனர். நீண்ட காலமாகவே தங்களுடைய பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு உறுப்பினர்கள் திணறி வந்தனர். காரணம் முதலில் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பிறகு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும். அதற்குள் உறுப்பினர் நிறுவனத்தின் சார்பில் ஒப்புதலும் பெற வேண்டும். இப்படி பல விஷயங்களை செய்து பிஎஃப் பணத்தை பெறுவதற்கு சிரமமாய் இருந்து வந்தது.

இதனால் அவசரத்திற்கு பணம் எடுப்பது EPFO உறுப்பினர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அதோடு EPF அமைப்பின் ஊழியர்களுக்கும் அதிகளவிலான காகிதப் பணிகள் இருந்தது. இதையெல்லாம் கவனித்த அமைப்பு இந்த இரண்டு வசதியையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

கடந்த ஆண்டு முதல் EPFO அமைப்பு தங்களுடைய டிஜிட்டல் சேவைகளை நவீனப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. ஆட்டோ கிளைம் செட்டில்மெண்ட் வசதியையும் கொண்டு வந்துள்ளது. சில நாட்களாக PF பணம் எடுக்கும் செயல்முறை முன்பை விட வேகமாக இருக்கிறது. இதற்கு முன்னர் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பெரும்பாலான கிளைம் கோரிக்கைகள் 3 முதல் 3 நாட்களுக்குள் முடிவடைந்து விடுவதாக தெரிவித்திருக்கிறது.

EPFO 3.0: வரப்போகுது! வரப்போகுது! இனி PF பணத்தை ஏடிஎம் கார்டில் எடுக்கலாம்! எந்த மாதம் முதல் தெரியுமா?

யுபிஐ மற்றும் ஏடிஎம் வசதி எப்போது கிடைக்கும்?: மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா விரைவில் இந்த சேவை வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஒரு சில அறிக்கைகளின் படி இந்த ஜூன் மாதம் முதல் ஜூலை மாத இறுதிக்குள் இந்த சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

எவ்வளவு பணம் எடுக்கலாம்?: பணம் எடுப்பதற்கு EPFO அமைப்பு வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன்படி ஒரு இபிஎப்ஓ உறுப்பினர் தங்கள் PF பேலன்ஸில் 75% மட்டுமே எடுக்க முடியும். மீதமுள்ள 25% தொகை ஓய்வூதிய நிதியாக அந்தந்த உறுப்பினர்களின் கணக்கிலேயே இருக்கும்.

ஏடிஎம் வசதி எப்படி செயல்படுத்தப்படும்?: அறிக்கைகளின் படி EPFO அமைப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் பிரத்தியேக ஏடிஎம் கார்டை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக அவர்கள் நேரடியாக ஏடிஎம்மில் தங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். விரைவில் இது குறித்த அறிவிப்பும் வெளியாகலாம்.

யாருக்கெல்லாம் இந்த வசதி?: இந்த இரண்டு வசதியையும் பயன்படுத்த கண்டிப்பாக இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களுடைய ஆதார் நம்பரை யூஏஎன் நம்பருடன் இணைத்திருக்க வேண்டும். OTP அடிப்படையிலான சரிபார்ப்பு இதற்கு தேவைப்படும். அதற்கு கண்டிப்பாக உறுப்பினர்கள் பேன் நம்பர், சரியான IFSC கோட் மற்றும் சரிபார்க்கப்பட்ட வங்கி கணக்கு, மொபைல் நம்பர் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

உண்மையிலேயே மாதச் சம்பளக்காரர்களுக்கு இந்த பிஎஃப் தொகை தான் முதன்மையான சேமிப்பு. அவசர காலம் என்று வந்துவிட்டால் உடனடியாக தங்கள் பிஎப் பணத்தையே எதிர்பார்த்து இருந்த நபர்களுக்கு இந்த இரண்டு வசதியும் நிவாரணம் அளித்துள்ளது. முன்பெல்லாம் அவசர மருத்துவ செலவுகள் ஏற்பட்டாலும் பத்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது வரவிருக்கும் இந்த புதிய வசதியின் காரணமாக தேவைப்படும் நேரத்தில் சட்டென பிஎப் பணத்தை எடுத்து பயன்படுத்த முடியும். சேமிப்பு என்பது அவசரத்திற்கு பயன்படுத்துவதற்கு தானே! அப்படி இருக்கையில் தேவையெல்லாம் முடிந்த பிறகு பணம் கிடைத்து என்ன பயன்? இவ்வளவு நாட்களாக இபிஎப் உறுப்பினர்களுக்கு இதுதான் பிரச்சினையாக இருந்தது. ஆனால் வரவிருக்கும் மாதங்களில் இந்த பிரச்சனை குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+