7 கோடி பேருக்கு நல்ல செய்தி! EPFO அமைப்பின் 3 அதிரடி மாற்றங்கள்! இனி PF பணம் எடுக்க நோ டென்ஷன்!

மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் ஏராளமான ஊழியர்கள், தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இந்நிலையில் EPFO அமைப்பு, தங்கள் 7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக பல்வேறு முக்கிய மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஊழியரும் தங்களுடைய PF பணத்தை எளிதாக எடுப்பதற்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ஏடிஎம் மற்றும் யுபிஐ வசதி: ஏடிஎம் கார்டு வந்ததிலிருந்து வங்கிகளுக்கு செல்லும் தேவை வெகுவாக குறைந்திருக்கிறது. ஒரு நாளைக்கு ரூ. 50,000 வரை ஏடிஎம் மூலமாகவே மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் நீண்ட காலமாக PF பணத்தை எடுப்பது சிக்கலான ஒன்றாகவே இருந்து வந்தது. EPFO அமைப்பு ஒவ்வொரு ஊழியர்களும் தங்கள் PF பணத்தை விரைவாக எடுத்துக் கொள்ளும் வகையில் ஏடிஎம் மற்றும் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது.

யுபிஐ இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. பெட்டிக் கடை தொடங்கி மால்கள் வரை, மக்கள் QR கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்புகின்றனர். யுபிஐ வந்ததிலிருந்து சில்லறைப் பிரச்சினைகள் வெகுவாக குறைந்திருக்கிறது. இது போன்ற காரணத்தால் EPFO உறுப்பினர்கள், இந்த குறிப்பிட்ட வசதி எப்போது கிடைக்கும்? என்று காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்.

EPFO அமைப்பின் முக்கிய மாற்றம்: ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான மாற்றத்தை EPFO அமைப்பு செய்யவிருக்கிறது. ஒரு ஊழியர் ஓய்வு பெற்ற பிறகு அவருடைய PF கணக்கில் இருக்கும் முழு பணமும் தானாகவே அந்த உறுப்பினர் வழங்கிய வங்கி கணக்கு செல்லும் வகையில் மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் உறுப்பினரின் பங்களிப்பு ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் வாயிலாக அவர் வழங்கிய வங்கி கணக்கிற்கு சென்று விடும்.

7 கோடி பேருக்கு நல்ல செய்தி! EPFO அமைப்பின் 3 அதிரடி மாற்றங்கள்!

இதனால் அவர் எக்காரணத்தினாலும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் செய்தால் EPF உறுப்பினர்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இத்தகைய மாற்றங்களைச் செய்து வருகிறது.

ஒரு ஊழியர் தங்களுடைய பிஎப் பணத்தை பகுதியளவு எடுக்க வேண்டும் என்றால், தற்போது வரை ஆன்லைன் மூலமாகவே எடுத்துக் கொள்ளலாம். சுமார் ரூ.5 லட்சம் வரையிலான தொகைக்கு ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் மூலம் பணம் அனுப்பப்படுகிறது. ஒரு ஊழியர் கோரிக்கையை சமர்ப்பித்த மூன்றே மூன்று நாட்களுக்குள் அவர் வழங்கிய வங்கி கணக்கிற்கு பிஎஃப் பணம் சென்றடைந்து விடும். இந்த அம்சத்தை இறுதியாக பைனல் செட்டில்மெண்ட் செய்வதற்கும் நீட்டிக்க EPFO அமைப்பு முயற்சி செய்து வருகிறது. அது மட்டுமின்றி ரூ.50 லட்சம் வரை இன்சூரன்ஸ் பிஎஃப் கிளைம்கள் இனி ஆட்டோமேட்டிக் செட்டில்மென்ட் முறையில் செயல்படுத்தப்படவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+