PF பணத்தை எடுக்கணுமா? இனி 10 நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! இறுதி கட்ட சோதனையில் UPI வசதி!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் 8 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். இவர்களின் முதன்மை சேமிப்பாக இருப்பது என்னவோ அவர்கள் வைத்திருக்கும் பிஎஃப் பணம். அவசரகாலம் ஏற்படும் போது இந்த பிஎஃப் பணத்தை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் அதிகம். ஆனால் இன்று வரையில் பணம் எடுக்கும் ப்ராசஸ் அவ்வளவு சுலபமானதாக இல்லை.

PF பணத்தை எடுக்க முதலில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும், அதன் பிறகு எப்போது பணம் அக்கவுண்டுக்கு கிரெடிட் செய்யப்படும் என்று வழி மேல் விழி வைத்து காத்திருக்க வேண்டும். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஈபிஎஃப்ஓ அமைப்பு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இனி உங்கள் பிஎஃப் பணத்தை, யூபிஐ மூலமாக அக்கவுண்டிற்கு அனுப்பி கொள்ளலாம். அதன் பிறகு வழக்கமாக நீங்கள் ஏடிஎம்-மில் எப்படி பணம் எடுக்கிறீர்களோ? அதே போல எடுத்துக் கொள்ளலாம்.

இன்று வரை நீங்கள் PF பணம் பெற விண்ணப்பித்தால் குறைந்தது 6 முதல் 10 நாட்கள் எடுக்கும். அதுவும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பிஎஃப் பணம் எடுக்க திட்டமிட்டிருந்தால் மேனுவல் வெரிஃபிகேஷன் இன்றி ஒப்புதல் கிடைக்காது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அரசு ஆவணங்களில் சிறு பிழை இருந்தாலும் PF கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

PF பணத்தை எடுக்கணுமா? இனி 10 நாள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை! இறுதி கட்ட சோதனையில் UPI வசதி!

அவசரக்காலம் சொல்லிவிட்டு வராது. அந்த சூழலில் இத்தனை நாட்கள் காத்திருந்து பணம் எடுக்க முடியாது. இனி அந்தக் கவலை வேண்டாம். ஈபிஎஃப்ஓ அமைப்பு 3.0 என்ற திட்டத்தின் கீழ் டிஜிட்டல் சேவையை மேம்படுத்தி வருகிறது. "உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை UPI மூலம் நேரடியாக அக்கவுண்டுக்கு மாற்றலாம். இதன் இறுதிக் கட்ட சோதனை முடிந்துள்ளது. PF தொகை உங்கள் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படும்", என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

EPFO 3.0 எவ்வாறு செயல்படும்?: UMANG ஆப்-பில், உறுப்பினர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளுக்கு எவ்வளவு பணத்தை அனுப்பலாம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டவுடன், நீங்கள் விரும்பியபடி அந்தப் பணத்தைப் பயன்படுத்தலாம். பேலன்ஸ் சரி பார்த்த பிறகு யுபிஐ எனேபிள்டு ஏடிஎம் அல்லது யுபிஐ டிரான்ஸ்ஃபர் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

யூபிஐ வசதியால் என்ன பயன்?: யூபிஐ என்றாலே உடனடி பரிமாற்றம் தான் நினைவுக்கு வரும். அதே போல நீங்களும் உங்கள் பிஎஃப் பணத்தை உடனடியாக வெறும் UPI பின் நம்பரை மட்டும் பயன்படுத்தி எடுக்க முடியும். பல நாள் ஆகக்கூடிய கோரிக்கையையும் நொடியில் முடிப்பதற்கு இது உதவியாக இருக்கும். திடீர் உடல்நலக் குறைவு, உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு பிஎஃப் பணத்தை பெறுவதற்கு இந்த வசதி உதவியாக இருக்கும்.

அதேபோல நீங்கள் மொத்த தொகையையும் யூபிஐ மூலம் எடுக்க முடியாது. 25 சதவீதம் PF கணக்கிலேயே லாக் செய்யப்பட்டு இருக்கும். கணக்கில் உள்ள இருப்பில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை மட்டுமே யூபிஐ அல்லது ஏடிஎம் வாயிலாக எடுக்க முடியும். எவ்வளவு தொகை லாக் செய்யப்பட்டு இருக்கும், நீங்கள் எவ்வளவு பணத்தை எடுக்க முடியும் என்பது தெளிவாக காண்பிக்கப்படும். இந்த வசதி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதை செய்திகள் அல்லது இது போன்ற பதிவுகள் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+