ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் மூலம் நம்முடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை நாம் எளிதாக ஏடிஎம் வாயிலாக எடுத்துக் கொள்ளும் வசதி கொண்டுவரப்பட இருக்கிறது. நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய சம்பளதாரர்களுக்கு ஈபிஎஃப் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையானது ஊழியர் சார்பிலும் அவர் வேலை செய்யும் நிறுவனம் சார்பிலும் வரவு வைக்கப்படும்.
பிஎஃப் பங்களிப்பு: ஊழியர் ஓய்வு பெறும் போது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கலாம் அந்த சமயத்தில் நிம்மதியான ஓய்வு காலத்தை அனுபவிக்க இந்த தொகை அவர்களுக்கு உதவும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இந்த பிஎஃப் கணக்குகளை ஈபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு கண்காணித்து மேலாண்மை செய்து வருகிறது. பிஎஃப் கணக்கில் நம்முடைய பெயரில் இருக்கும் பணத்தை நமக்கு ஒரு அவசர தேவை என வரும்போது பெற்றுக் கொள்ள முடியும்.

ஈபிஎஃப்ஓ 3.0 : பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுப்பது என்பது மிகப்பெரிய நடைமுறைகளைக் கொண்டது. அதற்கு ஒப்புதல் கிடைப்பதற்கு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும் என பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பது எளிதாக்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. ஈபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தின் மூலம் நம்முடைய பிஎஃப் கணக்குகள் மேலாண்மை செய்யப்படும் விதமே பெரிய அளவில் மாற்றம் அடைய இருக்கிறது.
9 கோடி உறுப்பினர்கள்: பிஎஃப் கணக்கு வைத்திருக்கக் கூடிய 9 கோடி உறுப்பினர்கள் இனி தங்களுடைய பிஎஃப் பணத்தை ஏடிஎம் இயந்திரங்கள் வாயிலாக எளிதாக எடுத்துக் கொள்ளலாம். எப்படி நாம் நம்முடைய வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி பணத்தை எடுக்கிறோமோ அதே போல ஈபிஎஃப் வழங்கக்கூடிய அட்டையை பயன்படுத்தி நாம் எளிதாக பணத்தை எடுக்க முடியும். இவ்வாறு எளிதாக பணம் எடுக்க விரும்பக்கூடிய பிஎஃப் உறுப்பினர்கள் தங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் எனப்படும் UAN எண்ணுடன் ஆதார் மற்றும் வங்கி கணக்கு உள்ளிட்டவற்றை முறைப்படி இணைத்து இருக்க வேண்டும். இதற்கு ஜூன் 30 ஆம் தேதி தான் கடைசி நாள்.
ஜூன் 30 கடைசி தேதி: இதுவரை அதை செய்யாத சம்பளதாரர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் செய்துவிட்டால் எளிதாக அவர்களுடைய பணத்தை ஏடிஎம் வாயிலாகவே பெற்றுக் கொள்ள முடியும். தற்போதைய சூழலில் ஒரு நபர் தன்னுடைய பிஃஎப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க வேண்டுமென்றால் ஆன்லைனில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட சில ஆவணங்களை இணைத்து ஈபிஎஃப் அமைப்பிற்கு அனுப்ப வேண்டும்.அவர்கள் அதனை பரிசீலித்து 25 நாட்களுக்குள் பணத்தை நம்முடைய வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பார்கள்.

- வீடு/நிலம் வாங்குவது: தற்போது இருக்கக்கூடிய விதிமுறைகளின் படி பார்க்கும்போது வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு பணம் எடுக்கலாம். அதற்கு குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பிஎஃப் உறுப்பினராக இருக்க வேண்டும். தேவையான பணம் முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் .
- கடன் திரும்ப செலுத்துவது: பிஎஃப் உறுப்பினராக குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும், மொத்த பி எஃப் தொகையும் எடுத்துக் கொள்ளலாம் அல்லது உங்களுடைய கடந்து 36 மாத கால அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியை கூட்டி பெற்றுக் கொள்ளலாம்.
- திருமணம்: திருமணம் செலவுகளுக்கு பணம் எடுக்க குறைந்தது 7 ஆண்டுகள் பிஎஃப் உறுப்பினராக இருக்க வேண்டும். தன்னுடைய பங்களிப்பில் இருந்து 50% தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
- குழந்தைகளின் கல்வி: 7 ஆண்டுகள் பிஎஃப் உறுப்பினராக இருக்க வேண்டும். தன்னுடைய பங்களிப்பில் இருந்து 50% தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
- மருத்துவ செலவு: அறுவை சிகிச்சை அல்லது ஒரு மாதத்திற்கு மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழல் ஆகிய நிலைகளில் உறுப்பினர் செய்த பங்களிப்புத் தொகையை மொத்தமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.
இயற்கை பேரிடர், 1 மாதத்திற்கு மேல் வேலை இல்லாமல் இருப்பது ஆகிய காரணங்களுக்கும் பணம் எடுக்கலாம். தற்போது ஏடிஎம் வாயிலாக பணம் எடுக்கும் வசதி வர இருப்பதால் மேலே கூறியவற்றுக்கு புதிய வரைமுறைகளை ஈபிஎஃப்ஓ அமைப்பு தற்போது வரையறுத்து வருகிறது. கூடிய விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்.
முழு இருப்பையும் எடுக்க முடியுமா?: அப்போது பி எஃப் கணக்கில் இருந்து ஏடிஎம் வாயிலாக எவ்வளவு தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்படும். தற்போதுள்ள ஈபிஎஃப் ஓ சட்டத்தின் படி பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் வேலையிலிருந்து ஓய்வு பெறும்போது மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பிட்ட சில தேவைகளுக்காக பகுதி அளவு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான வசதி வழங்கப்படுகிறது.
அடிக்கடி பணம் எடுக்கலாமா?: தற்போது இருக்கக்கூடிய நீண்ட நெடிய நடைமுறை காரணமாக பெரும்பாலான உறுப்பினர்கள் பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கு விரும்புவது கிடையாது. ஏனெனில் அதற்கு நிறைய செயல்முறைகளை செய்ய வேண்டியிருக்கும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பதால் பெரும்பாலானவர்கள் ஓய்வு காலத்திலேயே அதனைப் பெற்றுக் கொள்கிறேன் என விட்டுவிடுவார்கள். ஆனால் இந்த epfo 3.0 திட்டம் பணத்தை எடுப்பது எளிதாக்கி இருப்பதால் பெரும்பாலான பிஎஃப் உறுப்பினர்கள் அவசர தேவை என்றால் உடனடியாக pf கணக்கில் தான் கை வைப்பார்கள்.

5 ஆண்டுகள் பங்களிப்பு தேவை: குறிப்பாக தொடர்ந்து ஐந்த ஆண்டுகள் கூட பங்களிப்பு செய்யாத நபர்களும் தங்களுடைய பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்யும் முன் வருவார்கள். ஆனால் இவர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். வருமான வரி சட்டத்தின் நான்காவது அட்டவணையின் பிரிவு ஏ-வில் இருக்கும் விதிமுறைகள் எட்டு மற்றும் ஒன்பது அங்கீகரிக்கப்பட்ட பிஎஃப் கணக்கில் இருந்து எடுக்கப்படும் பணத்திற்கு மட்டுமே வரி கிடையாது என தெரிவித்திருக்கிறது.
வரி விதிக்கப்படுமா?: அங்கீகரிக்கப்பட்ட கணக்கு எனும் போது ஒரு குறிப்பிட்ட நபர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருந்தால் மட்டுமே அந்த கணக்கு அங்கீகரிக்கப்பட்டதாக பார்க்கப்படும். எனவே ஐந்து ஆண்டுகளுக்குள் பணத்தை எடுப்பவர்களுக்கு வரி விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே பணம் எடுப்பது தான் எளிதாகிவிட்டதே 5 ஆண்டுகள் கூட பங்களிப்பு செய்யாதவர்கள் பணத்தை எடுத்தால் வரி செலுத்த வேண்டும்.
10% டிடிஎஸ்: ஏடிஎம் வாயிலாக பிஎஃப் கணக்கில் இருந்து நீங்கள் 50,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் நீங்கள் 5 ஆண்டுகள் கூட திட்டத்தில் பங்களிப்பு செய்யாதவர் எனும் போது 10% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். எனவே கையில் தான் அட்டை இருக்கிறதே என அடிக்கடி பணம் எடுக்காமல் பிஎஃப் பணத்தை ஓய்வு காலத்திற்கான பணம் என எண்ணி முடிந்த வரை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது என எஸ்.எம். மோகன்கா & அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மயன்க் மோகன்கா, எக்கனாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் அறிவுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications