உங்க PF கணக்கிற்கு வட்டி வந்துவிட்டதா? EPFO வெளியிட்ட அப்டேட்!! முதல்ல இத செக் பண்ணுங்க..!!

இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் அரசு சார்பாக ஆண்டுதோறும் வட்டி வரவு வைக்கப்படுகிறது. அதாவது நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டி தருகிறது. இது காம்பவுண்டிங் முறையில் பெருகி நாம் ஓய்வு பெறும் போது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கிறது.

அந்த வகையில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு மிக முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ( EPFO ) 2025-26 நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. அதாவது உங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு 8.25% வட்டி கிடைக்கும். இது நேரடியாகவே பிஎஃப் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டு விடும். ஆனால் பல்வேறு சந்தாதாரர்களும் தங்களுக்கு இதுவரை பிஎஃப் வட்டி வரவில்லை என கூறுகின்றனர்.

உங்க PF கணக்கிற்கு வட்டி வந்துவிட்டதா? EPFO வெளியிட்ட அப்டேட்!! முதல்ல இத செக் பண்ணுங்க..!!

2026 மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலர் குழு 8.25 சதவீத வட்டி வழங்க ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து லட்சக்கணக்கான கணக்குகளைச் சரிபார்த்துப் புதுப்பிக்கும் செயல்முறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செய்து வருகிறது. இதன் காரணமாகவே சில உறுப்பினர்களுக்கு இன்னும் வட்டி வரவு வைக்கபடாமல் தாமதம் ஆகிறதாம்.

வழக்கமாக பிஎஃப் வட்டித் தொகை ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வந்து விடும். எனவே, இந்த ஆண்டும் அதே கால கட்டத்தில் வட்டி வரவு வைக்கப்படும் என சொல்லப்படுகிறது. எனவே பிஎஃப் சந்தாதாரர்கள் இது பற்றி கவலை கொள்ள தேவையில்லை.

Also Read

உங்களின் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை SMS மூலம் அறியலாம். இதற்கு 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று டைப் செய்து அனுப்ப வேண்டும். இங்கே ஆங்கிலத்துக்கு ENG என்று டைப் செய்ய வேண்டும் வேறு மொழி என்றால் அதற்கான குறியீடுகளை டைப் செய்ய வேண்டும். உங்கள் UAN என்பது உங்களின் UAN எண் ஆகும். இதனை பதிவுசெய்யப்பட்ட எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும்.

Recommended For You

மேலும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உடனே உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பேலன்ஸ் குறித்த மெசேஜ் வந்துவிடும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் எடுக்க தேவையான வசதிகளை பிஎஃப் அமைப்பு epfo 3.0 திட்டம் மூலம் சோதனை செய்து வருகிறது. இது நடைமுறைக்கு வந்துவிட்டால் பிஎஃப் சேவைகளை பெறுவது இன்னும், எளிமையானதாக மாறிவிடும். மொபைல் பேங்கிங் போல பிஎஃப் சேவைகள், கணக்கு நிர்வாகம் அனைத்துமே நம் கைக்குள் வந்துவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+