டெல்லி: ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் (EPS) கீழ் அதிக பென்சன் தொகை பெறுவதற்கான வழி காட்டுதலை, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பாக பென்சனுக்காக விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம். அதிக ஓய்வூதியம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 3, 2023 உடன் முடிவடைவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சுற்றறிக்கையின் படி, கடந்த நவம்பர் 4, 2022 உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க பணியாளர்கள், தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய பிராந்திய அலுவலகத்தில் விருப்பத்தினை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழிமுறைகள்
உச்ச நீதிமன்றத்தின் 4 மாத காலக்கெடுவுக்குள் முடிவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக, அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்ய ஊழியர்களுக்கு வாய்ப்பளித்து, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊதிய உச்ச வரம்பை விட அதிக ஊதியத்தில் ஓய்வூதிய பங்களிப்புகளை தேர்வு செய்யாத மற்றும் செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்கு பிறகு பணியில் உள்ள ஊழியர்களுக்கு புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இபிஎஃப் வழிமுறைகள்
புதிய அறிவுறுத்தல்களில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் அதிக ஓய்வூதிய பங்களிப்பிற்கான கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்தலாம். செப்டம்பர் 1, 2014 அன்று அல்லது அதற்கு முன் இ.பி.எஸ்-ன் சந்தாதாரராகத் தொடர்ந்த ஊழியர்களுக்கு ஆன்லைன் வசதி வழங்கப்படும். அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். மண்டல பி.எஃப் ஆணையர், விரிவான பொது தகவல்களுக்கு அறிவிப்பு பலகை மற்றும் பேனர்களில் போதுமான அறிவிப்பை வைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே அதிக ஊதியத்தில் பங்களித்திருந்தும், விருப்பத்தை முறையாகப் பயன்படுத்தாத ஊழியர்கள் இப்போது EPFO-ன் மண்டல அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
வருங்கால வைப்பு நிதியில் இருந்து ஓய்வூதிய நிதிக்கு சரிசெய்தல் தேவைப்படும் பங்கின் விஷயத்தில், நிதிக்கு ஏதேனும் மறு டெபாசிட் செய்தால், கூட்டு விருப்ப படிவத்தில் பணியாளரின் வெளிப்படையான ஒப்புதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு அளிக்கப்பட்ட வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் இருந்து EPFO-ன் ஓய்வூதிய நிதிக்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டால், அறங்காவலரின் உறுதிமொழி சமர்ப்பிக்கப்படும். விலக்கு அளிக்கப்படாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, தேவையான முதலாளியின் பங்களிப்பைத் திரும்பப் பெறுவது, EPS திட்டத்தின் 60வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்ட விகிதத்தில் வட்டியுடன் டெபாசிட் செய்யப்படும்.
1952 முதல் இன்றைய தேதி வரைக்கும் சரியான நிதி திரும்ப செலுத்தப்படும் என்று கூறியுள்ளது. மேலும் டெபாசிட் செய்யும் முறை மற்றும் ஓய்வூதியத்தை கணக்கிடும் முறை ஆகியவை அடுத்தடுத்த சுற்றறிக்கையின் மூலம் பின்பற்றப்படும் என்று கூறியுள்ளது.
முந்தைய சுற்றறிக்கைகள்
கடந்த மாதம், EPFO உண்மையான ஊதியத்தின் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற்ற மற்றும் செப்டம்பர் 2014-க்கு முன்னர் ஓய்வு பெற்ற ஊழியர்களின் வழக்குகளை மறுபரிசீலனை செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது. ஆனால், ஓய்வூதிய நிதி அமைப்புடன் அதிக ஊதியத்துடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத்தை தேர்வு செய்யவில்லை.
பயனுள்ள ஒரு அறிவிப்பு
அந்தச் சுற்றறிக்கையில், அதிகப் பணம் செலுத்துவதை நிறுத்துவதற்காக, செப்டம்பர் 1, 2014-க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களைப் பொறுத்தவரை, பாரா 11 (3) அல்லது முன் திருத்தப்பட்ட திட்டத்தின் கீழ் எந்த விருப்பத்தையும் பயன்படுத்தாமல் பென்சன் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 2023 முதல் அவர்களுக்கு அதிக பென்சன் வழங்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, அதிக ஊதியத்தில் அவர்களின் விவகாரம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பென்சன் உடனடியாக 5000 ரூபாயாக அல்லது 6500 ரூபாயாக வரையிலான ஊதியத்தில் பென்சன் ஆக மீட்டெடுக்கப்படலாம் என்று கூறியுள்ளது.
ஆக இது நிச்சயம் பயனுள்ள ஒரு அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications