EPFO கொடுத்த குட்நியூஸ்.. ஜனவரி மாதத்தில் நடந்த அற்புதம்..!!

ஓய்வூதிய நிதி அமைப்பு நிறுவனமான ஈபிஎப்ஓ (Employees' Provident Fund Organisation) ஜனவரி 2024 இல் 16.02 லட்சம் பேரை பணியில் சேர்த்து புதிய கணக்காளர்களாக இணைந்துள்ளனர் என ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த 16.02 லட்சம் பேரில் புதிய உறுப்பினர்களில் சுமார் 8.08 லட்சம் பேர் ஜனவரி 2024 இல் முதல் முறையாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் குறிப்பிடத்தக்கது. அதாவது படித்து முடித்த பட்டதாரிகள் முதல் முறையாக பணியில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை இது.

EPFO கொடுத்த குட்நியூஸ்.. ஜனவரி மாதத்தில் நடந்த அற்புதம்..!!

மேலும் ஈபிஎப்ஓ தரவுகள் என்பது வகைப்படுத்தப்பட்ட துறையின் ஊழியர்கள் எண்ணிக்கை மட்டுமே, வகைப்படுத்தாத துறை ஊழியர்கள் இதில் இருக்கமாட்டார்கள். இந்த நிலையில் புதிதாக தேர்ந்தவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறியவர்கள், சில ஆண்டு இடைவெளிக்குப் பின்பு இணைந்தவர்கள் என அனைவரையும் சேர்த்து 16.02 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாக ஈபிஎப்ஓ தெரிவித்துள்ளது.

புதிய உறுப்பினர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கை கொண்டு உள்ள வேளையில் இவர்கள் அனைவரும் 18-25 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2024 இல் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் 56.41 சதவீதம் பேர் இந்த வயது குழுவைச் சேர்ந்தவர்கள். இது, ஒழுங்குபடுத்தப்பட்ட துறையில் பணிக்குச் சேரும் பெரும்பான்மையானோர் இளைஞர்கள், குறிப்பாக முதல்முறையாக வேலை தேடுபவர்கள் என்பதைக் குறிக்கிறது.

மேலும் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் அறிக்கையில், சுமார் 12.17 லட்சம் உறுப்பினர்கள் EPFO-வை விட்டு வெளியேறி, பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் வேலை மாறி, EPFO-வின் கீழ் கொண்டு வரப்பட்ட நிறுவனங்களில் மீண்டும் சேர்ந்துள்ளனர்.

பாலின வாரியாக பார்க்கும் போதும் 8.08 லட்சம் புதிய உறுப்பினர்களில் சுமார் 2.05 லட்சம் பேர் புதிய பெண் உறுப்பினர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த மாதத்தின் போது சேர்க்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 3.03 லட்சமாக இருந்தது.

பெண் உறுப்பினர்களின் அதிகரிப்பு, மேலும் கார்ப்ரேட் நிறுவனங்களில் அதிகரித்துள்ள இன்க்ளுஷன் மற்றும் பன்முக தொழிலாளர் சந்தைக்கு மாற்றம் ஏற்பட்டு உள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது.

EPFO என்றால் என்ன..?: ஈ.பி.எஃப்.ஓ. என்பது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அமைப்பு ஆகும். இது, இந்தியாவில் உள்ள பணியாளர்களுக்கான ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தை நிர்வகித்துக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டது.

இ.பி.எஃப் கணக்கு (EPF) என்றால் என்ன?: ஈ.பி.எஃப். கணக்கு என்பது ஈ.பி.எஃப்.ஓ. நிர்வகிக்கும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். இந்த திட்டத்தில், பணியாளர் மற்றும் அவர் பணிபுரியும் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பங்களிப்புச் செய்கின்றனர். இந்த பங்களிப்பு தொகை பணியாளரின் ஓய்வுக் காலத்தில் அவருக்குக் கிடைக்கும் நிதியாக மாறுகிறது.

ஈ.பி.எஃப். கணக்கின் சில முக்கிய அம்சங்கள்: ஓய்வூதியக் காலத்தில் நிதி ஆதாரத்தை வழங்குகிறது, இதனால் ஊழியர்கள் விருப்பினால் கூடுதல் தொகையை VPF வாயிலாக முதலீடு செய்ய முடியும். பணி இழப்பு அல்லது ஊனமுற்ற நிலையில் சேமித்து வைத்த நிதியில் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதில் முதலீடு செய்யும் பணத்திற்கு வரிச் சலுகைகள் பெற முடியும்.

EPFO நிதி பங்களிப்பு: EPF கணக்கில் ஒவ்வொரு மாதமும் வைப்பு செய்யப்படும் நிதித் தொகையில் 2 பிரிவுகள் உள்ளது ஒன்று ஊழியர் பங்களிப்பு, மற்றொன்று ஊழியர் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்களிப்பு.

ஊழியர் பங்களிப்பு என்பது ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் (Basic Salary) 12% ஈ.பி.எஃப். கணக்கிற்கு டெபாசிட் செய்யப்படுகிறது.

நிறுவனத்தின் பங்களிப்பு என்பது நிறுவனம் ஊழியரின் அடிப்படை சம்பளத்தின் 12% பங்களிப்பு செலுத்த வேண்டும். இதில், 8.33% தொகை ஓய்வூதிய திட்டமான (Employees' Pension Scheme - EPS) கணக்கிற்குச் செலுத்தப்படுகிறது. 3.67% தொகை ஈ.பி.எஃப். கணக்கிற்குச் செலுத்தப்படுகிறது.

சில நிறுவனங்களில், 20 அல்லது குறைவாக ஊழியர்கள் இருந்தால் அல்லது நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினால், மொத்த பங்களிப்பு 10% ஆக இருக்கும் (ஊழியர் மற்றும் நிறுவனர் தலா 5%). 20 ஊழியர்களுக்கும் அதிகமாக இருந்தால் 12% சதவீத முறை பின்பற்றப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+