ஊழியர்களின் எதிர்காலத்தை எளிதாக்கும் வகையில், இபிஎஃப்ஓ வசதியை அறிமுகம் செய்யப்பட்டது. EPFO-ன் கீழ் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்படுகிறது. அந்த கழிக்கப்பட்ட தொகை, வட்டியுடன் ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்குத் திருப்பி வழங்கப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. மேலும், ஏதேனும் திருமணம், மருத்துவ தேவைகள் போன்ற அவசர காலங்களில் கூட பணம் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், தற்போது ஏடிஎம் மூலம் கூட பிஎஃப் பணத்தை எடுக்கும் வகையில், புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, தனது தற்காலிக சம்பளப் பட்டியல் தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025 ஏப்ரல் மாதத்தில் மட்டுமே மொத்தம் 19.14 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது முந்தைய மார்ச் மாதத்தை விட 31.31 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு பகுப்பாய்வின்படி, கடந்த 2024 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகர உறுப்பினர் சேர்க்கை 1.17 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தொடர் முயற்சிகளாலும், அதிகரித்த வேலைவாய்ப்புகளாலும் தான் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டு (2025) ஏப்ரல் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய உறுப்பினர்களாக 8.49 லட்சம் பேரை சேர்த்துள்ளது. இது இந்தாண்டு மார்ச் மாதத்தை விட 12.49 சதவீதம் அதிகமாகும். இந்த வளர்ச்சிக்குக்கு அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகள், ஊழியர்களின் நலன்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வெற்றிகரமான திட்டங்கள் ஆகியவையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. EPFO-வில் சேர்க்கப்பட்ட புதிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் 18-25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
ஏற்கனவே EPFO திட்டத்தில் இருந்து வெளியேறிய 15.77 லட்சம் பேர், இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் மீண்டும் பிஎஃப் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2025ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தை விட 19.19 % அதிகமாகும். 2025 ஏப்ரல் மாதத்தில் சுமார் 2.45 லட்சம் புதிய பெண் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், 17.63 சதவீதம் அதிகம் ஆகும். 2025 ஏப்ரலில், பெண்கள் சேர்க்கை 3.95 லட்சமாக இருந்தது. இது, மார்ச் 2025 உடன் ஒப்பிடுகையில், 35.24 சதவீதம் அதிகமாகும்.
மாநில வாரியாக பார்க்கும்போது, 2025 ஏப்ரல் மாதத்தில் மகாராஷ்டிரா 21.12 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த 2018 ஏப்ரல் மாதம் முதலே 2027 செப்டம்பர் காலகட்டத்திற்கான சம்பளப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. மாதாந்திர சம்பளப் பட்டியலில், UAN மூலம் முதல் முறையாக பிஎஃப் திட்டத்தில் இணையும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் PF திட்டத்தில் இருந்து வெளியேறும் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் மீண்டும் உறுப்பினர்களாக இணைந்தோரின் எண்ணிக்கையை வெளியிடப்படுகிறது. இந்த பிஎஃப் திட்டத்தில் நிறைய அம்சங்களும், சலுகைகளும் இருப்பதால் மாதந்தோறும் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் இணைந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications