EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. வட்டி உயர்வால் மாத சம்பளக்காரர்கள் கொண்டாட்டம்..!

EPFO என சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2022-23 ஆம் நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 8.15% என அறிவித்துள்ளது. EPF கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜூலை 24 தேதியிட்ட அறிக்கை மூலம் அனைத்து மாத சம்பளக்காரர்களுக்கும் EPFO அறிவித்துள்ளது.

EPFO அமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 1952 ஆம் ஆண்டு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதித் திட்ட கணக்கில் 2022-23 ஆம் ஆண்டுக்கு 8.15 சதவீத வட்டி வருமானத்தை வரவு வைக்க மத்திய அரசு EPF 1952 60(1) விதியின் கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. வட்டி உயர்வால் மாத சம்பளக்காரர்கள் கொண்டாட்டம்..!

மத்திய அரசு 2021-22 ஆம் நிதியாண்டுக்கு 8.10 சதவீத வட்டி வருமானத்தை கொடுத்த நிலையில் தற்போது 0.05 சதவீதம் அதிகரித்து மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டுக்கு அளிக்க உள்ளது. 2020-21 ஆம் நிதியாண்டில் 8.50 சதவீதமும், 2019-20 ஆம் நிதியாண்டில் 8.50 சதவீதமும், 2018-19 ஆம் நிதியாண்டில் 8.65 சதவீதமும், 2017-18 ஆம் நிதியாண்டில் 8.55 சதவீதமும், 2016-17 ஆம் நிதியாண்டில் 8.65 சதவீதமும், 2015-16 ஆம் நிதியாண்டில் 8.80 சதவீதமும், 2013-15 ஆம் நிதியாண்டுகளில் 8.75 சதவீதமும் வட்டி வருமானத்தை கொடுத்தது EPFO.

2010-11 ஆம் நிதியாண்டில் அதிகப்படியாக 9.50 சதவீதம் அளவிலான வட்டி வருமானத்தை EPF கணக்கில் இருக்கும் மாத சம்பளக்காரர்களின் கொடுத்தது EPFO.

மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதத்தை 8.1% என்று மத்திய அரசு அறிவித்தது, இது 1977-1978 க்குப் பிறகு மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இந்த 40 ஆண்டு கால வட்டி வட்டி விகிதத்தை உயர்த்தப்படுமா என்ற முக்கிய கேள்வியுடன் மார்ச் 2023ல் மத்திய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.

2022-2023 ஆம் நிதியாண்டுக்கான மாத சம்பளக்காரர்களின் ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்காக, EPFO அமைப்பின் மத்திய கருவூல குழு மார்ச் டெல்லியில் இரண்டு நாள் முக்கியமான கூட்டத்தை துவங்கியுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை 8.15 சதவீதம் நிர்யணம் செய்யப்பட மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டது.

இன்று இதற்கான ஒப்புதலை கொடுத்துள்ள நிலையில் அடுத்த சில வாரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டி தொகையை கணக்கிட்டு டெபாசிட் செய்யப்பட உள்ளது. மேலும் உங்கள் ஈபிஎப்ஓ கணக்கில் இருக்கும் வைப்பு நிதியின் அளவை செக் செய்ய பல வழிகள் உள்ளது.

1. Umang app வாயிலாக செக் செய்யலாம்.
2. EPF ஈ-சேவை தளத்திற்கு சென்று செக் செய்யலாம்.
3. மிஸ்டு கால் கொடுத்து செக் செய்யலாம்
4. எஸ்எம்எஸ் வாயிலாக EPF பேலென்ஸ் தொகையை செக் செய்யலாம்.

இதில் ஈசியான மற்றும் சிறப்பான வழி Umang app வாயிலாக செக் செய்வது தான்.
படி 1: உமாங் செயலியை முதலில் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்
படி 2: EPFO தளத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து பதிவு செய்யவும்
படி 3: UMANG செயிலிக்குள் நுழைந்த உடன் "EPFO" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
படி 4: உள்ளே சென்றது "View Passbook" என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: அடுத்து வரும் திரையில் உங்கள் EPF கணக்கிற்கான UAN எண்-ஐ உள்ளிட்ட பிறகு, OTP ஐப் பெறுவீர்கள், இதை டைப் செய்து உள்நுழைய வேண்டும்.
படி 6: அடுத்த திரையில் உங்கள் பாஸ்புக் டேட்டாவில் நீங்கள் பணியாற்றிய நிறுவனத்தின் பெயரில் கணக்கு உருவாக்கப்பட்டு இருக்கும், அதை கிளிக் செய்த உடன் EPF இருப்பு தொகையை தெரிந்துக்கொள்ள முடியும்.

வங்கி வைப்பு நிதியை காட்டிலும் அதிகப்படியான வட்டி வருமானம் EPFO கணக்கில் கிடைக்கும் என்பதால் நீங்கள் உங்கள் சம்பளதில் கூடுதல் பங்கீட்டை VPF வாயிலாக செலுத்தி கூடுதல் வருமானத்தை பெறலாம். தற்போது வங்கிகள், தபால் நிலையத்தில் அதிகப்படியாக 6.9 சதவீதம் மட்டுமே வட்டி விகிதமாக பெற முடிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+