சென்னை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, FY2023-24க்கான EPF திட்டத்தின் வட்டி விகிதத்தை கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவித்தது.
EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி என்பது ஒவ்வொரு மாதமும், பணியாளர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் பணியாளரின் ஈபிஎஃப் கணக்கில் தனித்தனியாக ஊழியரின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12% தொகையை செலுத்த வேண்டும்.

இது அந்த பணியாளர் பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு உதவியாக இருக்கும். சில நிபந்தனைகளின் கீழ் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு தங்கள் EPF கார்பஸை திரும்பப் பெறுவதற்கான வழிகளும் உள்ளது.
தற்போது 2023-24ஆம் நிதியாண்டில், இந்தத் திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு 8.25% வட்டி விகிதம் வழங்கப்பட உள்ளது என்று EPFO அமைப்பு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஒவ்வொரு வருடமும் இந்த வட்டி விகிதத்தை EPFO மாற்றி அமைக்கும். அந்த வகையில் கடந்த நிதியாண்டில் EPF திட்டத்திற்கு 8.15% வட்டி வழங்கப்பட்டது.
EPFO அமைப்பின் கீழ் உள்ள ஊழியர்கள் தங்கள் கணக்குகளில் இந்த நிதியாண்டில் வழங்கப்பட உள்ள கூடுதல் வட்டி விகிதத்தின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஊழியர்களின் வங்கி கணக்குகளில் EPFO வட்டி விகிதம் எப்போது வரவு வைக்கப்படும்?: சமீபத்தில் EPFO அமைப்பு தனது அதிகாரப் பூர்வ X தளத்தில் ஒரு வினாவுக்கு விடை அளிக்குமாறு அதன் பயனாளர்களிடம் கேட்டிருந்தது. மேலும் முதல் 10 பங்களிப்பாளர்களுக்கு சர்டிபிகேட் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. அந்தப் போஸ்டில் ஒருவர், 2023-24 ஆம் நிதியாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டித் தொகை எப்போது வரவு வைக்கப்படும்? என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், ஓய்வூதிய நிதி அமைப்பு, இந்த கூடுதல் வட்டி வழங்குவதற்கான செயல்முறை நடைபெற்று வருவதாகவும், ஊழியர்களுக்கு EPF வட்டி விரைவில் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

EPFOவின் குழுவான மத்திய அறங்காவலர் குழு (CBT), பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்துமாறு அறிவுறுத்தியது. அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் EPF திட்டத்தின் வட்டி விகிதத்தை, FY24 க்கு 8.25% ஆக உயர்த்த EPFO அமைப்பு முடிவு செய்தது. ஒவ்வொரு வருடமும், அந்த ஆண்டின் கடைசி நாளில், மாதாந்திர நிலுவைத் தொகையின் அடிப்படையில் ஊழியர்களின் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படுகிறது.
சமீபத்தில் ஈபிஎஃப்ஓ (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றத்தின்படி, EPFO அமைப்பில் இருக்கும் உறுப்பினர்கள் ஒரு நிறுவனத்தை விட்டு மற்றொரு நிறுவனத்திற்கு சென்றால், அவர்களின் ஈபிஎஃப் (EPF) தொகை தானாகவே பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்திற்கு மாற்றியமைக்கப்படும். இதற்காக அந்த உறுப்பினர்கள், விண்ணப்ப படிவம் 31 போன்ற படிவங்களை பயன்படுத்த வேண்டிய எந்த வித அவசியமும் இருக்காது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications