இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தான் ஈபிஎஃப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோடிக்கணக்கான ஊழியர்கள் இதில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கின்றனர்.
இந்த பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் சார்பாகவும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் சார்பாகவும் செய்யப்படக்கூடிய பங்களிப்பு பின்னாளில் இவர்கள் ஓய்வு பெறும்போது பெரிய தொகையாக வந்து நிற்கும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குவதால் காம்பவுண்டிங் முறையில் இந்த பணம் வளர்கிறது.

பிஎஃப் கணக்குகளை மேலாண்மை செய்து வரக்கூடிய ஈபிஎஃப்ஓ அமைப்பு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்படி குடிமக்கள் ஈபிஎஃப்ஓ அமைப்புக்கு என கிரியேட்டிவான முறையில் ஒரு டேக்லைனை உருவாக்கி தரவேண்டும். இவ்வாறு டேக்லைன் உருவாக்கித் தரும்போது அது ஈபிஎஃப்ஓ அமைப்பின் சமூக பாதுகாப்பு, நம்பிக்கை, தொழிலாளர் மேம்பாடு உள்ளிட்டவை உள்ளிட்டவற்றை அர்த்தமாகக் கொண்ட டேக்லைனாக இருக்க வேண்டும்.
சிறந்த டேக்லைனை உருவாக்கி தரக்கூடிய நபர்களுக்கு ஈபிஎஃப்ஓ அமைப்பு 21 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்க இருக்கிறது. இதற்காக இபிஎப் அமைப்பு Mygov தளத்தோடு இணைந்து குடிமக்களுக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. உங்களின் கிரியேட்டிவிட்டியை கொண்டு ஈபிஎஃப்ஓ அமைப்பிற்கு சிறப்பான ஒரு டேக்லைனை உருவாக்கி தாருங்கள் என கேட்டிருக்கிறது.
Mygov தளத்தில் இதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கிறது இதில் போட்டியிட்டு மூன்று முதல் மூன்று இடங்களை வெல்பவர்களுக்கான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சிறந்த டேக்லைன் கொடுப்பவர்களுக்கு முதல் பரிசாக 21 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இரண்டாவது பரிசாக 11 ஆயிரம் ரூபாயும் மூன்றாவது பரிசாக 5100 ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஈபிஎஃப்ஓ அமைப்பு சார்பாக ஒரு சான்றிதழும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறது. இதில் கலந்து கொள்ளக்கூடிய போட்டியாளர்கள் ஹிந்தி மொழியில் டேக்லைனை கொடுக்க வேண்டும். ஒரு பயனர் ஒரு சப்மிஷனை தான் வழங்க வேண்டும்.
Mygov இணையதளம் வாயிலாக போட்டியாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சாட் ஜிபிடி போன்ற ஏஐ செயலிகளை பயன்படுத்தி கன்டென்ட் உருவாக்க கூடாது என்றும் கூறப்பட்டிருக்கிறது . இதில் கலந்து கொள்ள அக்டோபர் 10ஆம் தேதியே கடைசி நாளாகும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications