மாத சம்பளக்காரர்களுக்கு EPFO அமைப்பு விரைவில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. பிஎஃப் (EPF) கணக்கில் உள்ள தொகையை அடுத்த சில மாதத்தில் ஏடிஎம் மூலமாகவோ அல்லது யூபிஐ மூலமாகவோ நொடிப்பொழுதில் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது.
இதுக்குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தாலும் அதிகாரப்பூர்வமாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இந்த வசதிகள் மார்ச் 2026க்குள் அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை மாத சம்பளக்காரர்கள் பெற வேண்டும் என்றால் பல படிவங்களை நிரப்ப வேண்டியிருக்கிறது. இது பலருக்கு பெரும் பிரச்சனையாகவும் தலைவலியாகவும் இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் வரையில் டிஜிட்டல் இந்தியாவில் பண பரிமாற்றத்தை எளிதாக்கும் பொருட்டு மத்திய தொழிலாளர் அமைச்சகம் பிஎஃப் தொகை எடுப்பதை எளிதாக்கி வருகிறது.
ஏற்கனவே பிஎப் உறுப்பினர்கள் அவசர தேவைக்கு 75 சதவீத தொகையை உடனடியாக எடுக்க முடியும். இப்போது ஏடிஎம் மற்றும் யூபிஐ வசதி வருவதால் இன்னும் எளிதாகும்.
முன்பு பிஎஃப் தொகையில் உறுப்பினரின் தங்களுடைய பங்களிப்பு மற்றும் அதன் வட்டி மட்டுமே எடுக்க முடியும் வகையில் விதிமுறைகள் இருந்து வந்தது. இந்த தொகையில் கூட 50 முதல் 100 சதவீதம் வரையிலான தொகையை பல்வேறு காரணத்தைப் பொறுத்து திரும்ப எடுக்கும் வாய்ப்பை கொடுத்து வந்தது.
இப்போது புதிய விதிமுறைப்படி ஊழியர் பணியாற்றும் நிறுவனம் பிஎப் கணக்கில் செலுத்தும் தொகையையும் சேர்த்து எடுக்கலாம். இதனால் 75 சதவீத தொகை எடுக்கும் போது கூடுதல் தொகை கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ஏடிஎம் வாயிலாகவும், யூபிஐ வாயிலாகவும் பணத்தை எடுக்கும் வாய்ப்பை வந்தால் சாமானிய மக்களுக்கு பெரிய அளவில் உதவும்.


Click it and Unblock the Notifications