EPFO அமைப்பு தனது உறுப்பினர்களின் சேவைகளை எளிதாக்கும் வகையில், மருத்துவம், கல்வி, திருமணம் மற்றும் வீடு வாங்குதல் ஆகிய நான்கு முக்கிய தேவைகளுக்கு தங்களுடைய பிஎப் தொகையை வித்டிரா செய்யும் கோரிக்கைகளை ஆட்டோ அப்ரூவல் மூலம் விரைவாகத் தீர்க்கும் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ளது..
மாத சம்பளக்காரர்கள் அனைவருக்கும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியும், தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஒரு பகுதியும் பிஎப் கணக்கில் வரவு வைக்கப்படும். இப்படி நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் பிஎப் கணக்கையும், பணத்தையும் பாதுகாத்து வரும் அமைப்பு தான் EPFO.

பிஎப் பணம் என்பது முன்பெல்லாம் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது எடுக்கப்படும் தொகை, ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. இன்றைய தலைமுறையில் பலர் அவசர தேவைக்காகக் கூட பணத்தை எடுக்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர். இதனால் EPFO அமைப்பு அதிகப்படியான கோரிக்கைகளைப் பெறுகிறது.
இதை கையாளும் விதமாக மக்களின் பிஎப் பணத்தின் வித்டிராவல் கோரிக்கையை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எளிதாக்கும் பணியை சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது. இந்த நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
கல்வி மற்றும் திருமணத்திற்கான உதவித்தொகை கோரிக்கைகளுக்கு விதி 68 கே (Rule 68K) கீழ் ஆட்டோ செட்டில்மென்ட் வசதியும், வீடு வாங்குவதற்கான உதவித்தொகை கோரிக்கைகளுக்கு விதி 68 பி (Rule 68B) கீழ் ஆட்டோ செட்டில்மென்ட் வசதியும் 2024 மே 13ம் நாள் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின் மூலம் நாட்டின் அனைத்து EPFO உறுப்பினர்களுக்கு அறிவித்தது.
இதேபோல் மருத்துவச் சிகிச்சைக்கு பிஎப் தொகையில் முன்பணம் பெறுவதற்கு விதி 68 ஜே (Rule 68J) கீழ் வழங்கப்படும் தொகை ஏப்ரல் 16, 2024ம் நாள் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோ செட்டில்மென்ட் வசதி ஏப்ரல் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், இனிமேல் இந்த நான்கு தேவைகளுக்காகவும் ரூ.1 லட்சம் வரையிலான உதவித்தொகை கோரிக்கைகள் எந்தவித மனித தலையீடும் இல்லாமல், ஆட்டோ செட்டில்மென்ட் செய்யும் கட்டமைப்பை ஈபிஎப்ஓ அமைப்பு நடைமுறைப்படுத்தியுள்ளது.
விதி 68ஜே (Rule 68J): 1952 ஆம் ஆண்டின் EPF திட்டத்தின் விதி 68ஜே என்பது, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உடல்நலக் குறைவுக்கான சிகிச்சைக்காக EPF கணக்கில் இருந்து ஒரு பகுதியை (முன்பணம்) திரும்பப் பெறுவது குறித்த விதியாகும். இந்த முன்பணம் உறுப்பினர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களின் சிகிச்சைக்காக வழங்கப்படுகிறது.
விதி 68கே (Rule 68K): இந்த விதி, PF கணக்காளரின் பிள்ளைகளின் திருமணம் அல்லது உயர்கல்விக்காக EPF கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதை அனுமதிக்கிறது. இந்த விதியின் கீழ் தன்னுடைய, தன் மகள், மகன், சகோதரர் அல்லது சகோதரி ஆகியோரின் திருமணத்திற்காக அல்லது மகன் அல்லது மகளின் உயர்கல்விக்காகப் பணத்தைத் திரும்பப் பெற அனுமதிக்கிறது.
விதி 68பி (Rule 68B): இந்த விதி, வீடு வாங்குதல் அல்லது கட்டுவதற்காக பிஎப் உறுப்பினர்கள் பணத்தை திரும்பப் பெறுவதை அனுமதிக்கிறது. இதேபோல் சொந்த வீட்டில் மாற்றம் அல்லது மேம்பாடு செய்ய இந்த பிஎப் அட்வான்ஸ் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications