2022-2023 ஆம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்காக, EPFO அமைப்பின் மத்திய கருவூல குழு திங்கள்கிழமை ஒரு முக்கியமான கூட்டத்தை துவங்கியுள்ளது.
இக்கூட்டம் டெல்லியில் அடுத்த இரண்டு நாள் நடத்தப்பட உள்ளது, இக்கூட்டத்தில் பல கோடி மாத சம்பளக்காரர்களின் EPF கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு எவ்வளவு வட்டி விகிதம் அளிக்க உள்ளது என முடிவு செய்யப்படும். இந்த கூட்டம் ஒவ்வொரு ஆண்டு EPFO அமைப்பின் முதலீட்டு லாபத்தில் இருக்கும் லாபத்தை பொருத்து இதன் வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது.
இந்த வகையில் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய இந்த 2 நாள் கூட்டம் துவங்கப்பட்டு உள்ளது.
EPF கணக்கு வட்டி விகிதம்
மார்ச் 2022 இல் 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி விகிதத்தை 8.1% என்று மத்திய அரசு அறிவித்தது, இது 1977-1978 க்குப் பிறகு மிகக் குறைந்த வட்டி விகிதமாகும். இந்த 40 ஆண்டு கால வட்டி வட்டி விகிதத்தை உயர்த்தப்படுமா என்பது தான் முக்கியமான கேள்வியாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை குறைக்க பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகளவில் உயர்த்தியிருக்கும் நிலையில், வங்கி வைப்பு நிதிக்கு அதிகப்படியான வட்டி வரும் கிடைக்கும் தருனத்தில் EPF கணக்குகிற்கு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதத்தை 8.1% விட அதிகமாக வட்டி விகிதம் அறிவிக்கப்படுமா என்பது தான் மாத சம்பளக்காரர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 2020-2021 ஆம் நிதியாண்டுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வட்டி விகித வரலாறு
1955 முதல் EPF கணக்கிற்கான வட்டி விகித வரலாறு
2021 - 2022 : 8.10%
2020 - 2021 : 8.50%
2019 - 2020 : 8.50%
2018 - 2019 : 8.65%
2017 - 2018 : 8.55%
2016 - 2017 : 8.65%
2015 - 2016 : 8.80%
2013 - 2015 : 8.75%
2012 - 2013 : 8.50%
2011 - 2012 : 8.25%
2010 - 2011 : 9.50%
2005 - 2010 : 8.50%
2004 - 2005 : 9.50%
2001 - 2004 : 9.50%
2000 - 2001 : 12%
1989 - 2000 : 12.00%
1988 - 1989 : 11.80%
1987 - 1988 : 11.50%
1986 - 1987 : 11.00%
1985 - 1986 : 10.15%
1984 - 1985 : 9.90%
1983 - 1984 : 9.15%
1982 - 1983 : 8.75%
1981 - 1982 : 8.50%
1979 - 1981 : 8.25%
1978 - 1979 : 8.25% + 0.5% bonus
1977 - 1978 : 8.00%
1976 - 1977 : 7.50%
1975 - 1976 : 7.00%
1974 - 1975 : 6.50%
1972 - 1974 : 6.00%
1971 - 1972 : 5.80%
1970 - 1971 : 5.70%
1969 - 1970 : 5.50%
1968 - 1969 : 5.25%
1967 - 1968 : 5.00%
1966 - 1967 : 4.75%
1965 - 1966 : 4.50%
1963 - 1964 : 4.25%
1957 - 1963 : 4.00%
1955 - 1957 : 3.50%
1952 - 1955 : 3.00%
98 சதவீத கணக்கு
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான EPF கணக்கு வட்டி வருமானத்தை மார்ச் 6 ஆம் தேதி படி 98 சதவீத கணக்கிற்கு வைப்பு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் தாமதத்திற்கு முக்கியமான காரணம் டிசிஎஸ் விதிகளுக்கு இணங்க மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் ஆகியவற்றின் மூலம் தாமதமாகியுள்ளது.
அதிக ஓய்வூதியம்
பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் (EPS) பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தகுதிவாய்ந்த பணியாளர்கள் அதிகரித்த ஓய்வூதியத்திற்கு (EPS) விண்ணப்பிக்கும் செயல்முறையை விதிகளை அறிவித்தது. இப்போது EPS இன் கீழ் பெரிய ஓய்வூதியத்திற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், முன்பு இதற்கு தகுதியுடையவர்களும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications