டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வழங்கும் காப்பீட்டு திட்டத்தில் (EDLI), சம்பளம் இல்லாத விடுமுறை அல்லது ஊழியர்கள் பிஎஃப் கணக்கிற்கு வருங்கால வைப்பு நிதி வரவில்லை எனில் உறுதி செய்யப்பட்ட பலன் குறித்து தெளிபடுத்தியுள்ளது.
ஒரு ஊழியர் சம்பளம் இல்லாமல் விடுமுறையில் இருந்தால் அல்லது வேறு ஏதேனும் காரணிகளுக்காக விடுமுறையில் இருந்தால், அந்த காலகட்டத்தில் பிஎஃப் பங்களிப்பும் இல்லாவிட்டாலும், அவர் இறந்த நாளில் நிறுவனத்தில் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளலாம். ஊழியர் இறந்தபோது நிறுவனத்தின் மஸ்டர் ரோலில் இருந்தாலும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் அது ஏற்றுக் கொள்ளதக்கது.
உச்ச வரம்பு
ஊழியர் இறந்த மாதத்திற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி மாத சம்பளம் (அதிகபட்சம் பதினைந்தாயிரம் ருபாய்க்கு உட்பட்டது), இறந்தவரின் கணக்கில் உள்ள சராசரி நிலுவைத் தொகையின் 50% சேர்த்து 35 மடங்கால் பெருக்கப்படுகிறது. முந்தைய 12 மாதங்களில் ஊழியர் உறுப்பினராக இருந்த காலத்தில், அல்லது எதுவாக இருந்தாலும் 1,,85,000 ரூபாய் உச்ச வரம்புக்கு உட்பட்டது.
உத்தரவாத பலன்
உத்தரவாத பலன் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறையாமல் இருக்க வேண்டும். மேலும் உத்தரவாத பலன் ஏழு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
க்ளைம் மறுப்பா?
ஒரு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டாலும் கூட, பங்களிப்பு இல்லாததால் உங்களது EDLI நன்மைகள் மறுக்கப்படலாம். இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள இபிஎஃப்ஓ , அனைத்து ZOக்கள்/RO-க்கள் விதிகளின்படி க்ளைம் செய்ய கோரிக்கைகளை தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
7 நாட்களுக்குள் முடிவு?
மேலும் இவ்வாறு அளிக்கப்படும் கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் சரி செய்யப்பட வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்தகூடாது. ஊழியர்கள் மஸ்டர் ரோலில் இருப்பதாக கூறும் சந்தர்ப்பங்களில், EO வேறு விதமாக கூறினால், நிறுவனங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்கான காரணத்தை தெளிவாக பட்டியலிடப்பட வேண்டும். அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் EPFO சுற்றறிக்கை கூறியுள்ளது.
இலவச இன்சூரன்ஸ்
இபிஎஃப்ஓ அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு EDLI இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் 7 லட்சம் ரூபாய் வரையில் நன்மை அளிக்கிறது. இது முற்றிலும் இலவசம் என்பது இன்னொரு நல்ல விஷயம். இந்த இன்சூரன்ஸ் திட்டமானது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரூ.7 லட்சம் காப்பீடு
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள சந்தாதாரர் ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவருடைய நாமினி ஆயுள் காப்பீட்டுத் தொகையை கோரலாம். அல்லது ஊழியர்கள் நாமினியை நியமித்திருந்தால் அதன் மூலம் பலன் பெறலாம். இதில் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் நாமினிக்கு கிடைக்கலாம்.
நாமினிக்கு பலன்
இபிஎஃப்ஓ சந்தாதாரர் இறந்து விட்டால், பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்ட நாமினி காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இதற்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இறப்பு சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். நாமினி இல்லை என்றால், சட்டப்பூர்வ வாரிசு இந்தத் தொகையைப் பெறலாம்.
எப்போது கிடைக்காது?
இந்த பலன் சேவையில் இருக்கும் போது பி எஃப் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால் மட்டுமே பிஎஃப் கணக்கில் இந்த காப்பீட்டை பெற முடியும். எனினும் ஓய்வுக்குப் பிறகு ஊழியர் இறந்துவிட்டால் காப்பீட்டுத் தொகையை கோர முடியாது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications