இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கக் கூடிய சம்பளதாரர்களுக்கு இபிஎப்ஓ எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் பிஎப் கணக்கு தொடங்கப்படுகிறது. அந்த பிஎப் கணக்கில் ஊழியர் சார்பாகவும் அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் மாதந்தோறும் பங்களிப்பு செய்யப்படுகிறது.
தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது அவர்களுக்கு நிதி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இபிஎப் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் மிக முக்கியமானது இவ்வாறு ஓய்வு பெறக்கூடிய ஊழியர்களுக்கு வழங்கப்படக்கூடிய ஓய்வூதிய தொகை.

தற்போது இபிஎப்ஓ-வில் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இபிஎஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது . பல ஆண்டுகளாக இந்த குறைந்தபட்ச தொகை என்பது மாற்றப்படாமலேயே இருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு , வாழ்க்கை செலவினங்கள் உள்ளிட்டவை பல மடங்கு அதிகரித்து விட்டன. இதன் காரணமாக தற்போது வழங்கக்கூடிய ஓய்வூதிய தொகை தங்களுக்கு போதுமானதாக இல்லை அடிப்படை தேவைகளை கூட இதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என பல்வேறு ஓய்வூதியதாரர்களும் தொடர்ச்சியாக தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
பிஎப் கணக்கு வைத்து குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு வேலை செய்து அதில் பங்களிப்பு செய்த ஊழியர்கள் இந்த பென்சன் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அவர்கள் கணக்கில் பங்களிப்பு செய்யும் தொகையில் ஒரு கணிசமான பணமானது இந்த பென்ஷன் திட்டத்திற்கு சென்று விடும் . இவர்கள் ஓய்வு பெறும் பெற்ற பின்னர் இந்த பணத்தை மாதாந்திர ஓய்வூதிய தொகையாக பெறலாம்.
தற்போது இதில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதிய தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை 5000 ரூபாய் என உயர்த்த அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . பல்வேறு தொழிலாளர் யூனியன்களும் ஓய்வூதியதாரர்களுக்கான கூட்டமைப்பும் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் தான் அரசு இந்த ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
எனவே விரைவில் அரசு பென்சனை உயர்த்த ஒப்புதல் அளிக்கும் என சொல்லப்படுகிறது. எனவே இவ்வாறு ஓய்வூதிய தொகை அதிகரிக்கப்படும் பட்சத்தில் இபிஎஸ்-இல் பங்களிப்பு செய்து வரக்கூடிய தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இனி குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாகவே மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்கும். இது தவிர பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தை ஏடிஎம் வாயிலாகவே எடுப்பது போன்ற பல்வேறு புதிய சலுகைகளை இபிஎப்ஓ இந்த ஆண்டு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications