ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 5 மாத சரிவைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. ஈபிஎப்ஓ தரவுகள் நாட்டின் வகைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு துறையின் நிலையைக் கண்காணித்து வெளியிடப்பட்டு வருகிறது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 13.4 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 15.2 லட்சம் அளவை காட்டிலும் 11.8% குறைவு, மேலும் செப்டம்பர் 2024 அளவான 18.8 லட்சம் அளவை விட 28.7% குறைவாகும்.

பொதுவாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தையில் புதிதாகச் சேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும், ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் குறைந்துள்ளது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் EPFOவில் மொத்தம் 12.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், இது 2023 ஆம் ஆண்டின் இதே மாதத்தை விட 2.59% குறைவு.


Click it and Unblock the Notifications