தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நம்முடைய பெயரில் பிஎஃப் கணக்கு தொடங்கப்படும் மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்படும், அதேபோல நமக்கு வேலை தரக்கூடிய நிறுவனம் சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு நம்முடைய பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பி.எஃப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் நாம் வரவு வைக்கக்கூடிய பணத்திற்கு மத்திய அரசு வட்டி வழங்குகிறது. இது காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்து நாம் ஓய்வு பெறும்போது ரொக்க தொகையை நமக்கு கொடுக்கும்.

இது மட்டுமில்லாமல் பிஎஃப் திட்டத்தில் நமக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் கிடைப்பதற்கான ஒரு வசதியும் இருக்கிறது. நம்முடைய பிஎஃப் கணக்கிலிருந்து எவ்வளவு தொகை மாதாந்திர ஓய்வூதிய தொகையாக கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்து நாம் தெரிந்து வைத்துக் கொள்ளவது நல்லது. ஒரு நபரின் சம்பளத்தில் 12 சதவீத தொகை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். இதற்கு 15000 ரூபாய் என்பது வரம்பு.
அப்படி பார்த்தால் ஊழியரின் சம்பளத்தில் இருந்து 1800 ரூபாய், நிறுவனம் சார்பாக 1800 ரூபாய் என மொத்தம் 3600 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிஎஃப் கணக்கில் வரவு வைத்திருந்தால் உங்களுக்கு ஓய்வூதிய கணக்கும் தொடங்கப்படும். இதன் பின்னர் நிறுவனம் வரவு வைக்கும் பணத்தில் 1250 ரூபாய் ஓய்வூதிய கணக்கிற்கும் மீதமுள்ள 550 ரூபாய் பிஎஃப் கணக்கிற்கும் வரும்.
எனவே உங்களுக்கு பிஎஃப் கணக்கில் எவ்வளவு மாதாந்திர ஓய்வூதிய தொகை கிடைக்கும் என்பது எத்தனை ஆண்டு காலம் நீங்கள் pf கணக்கில் எவ்வளவு தொகையை வரவு வைத்தீர்கள் என்பதை பொறுத்து அமையும். இதற்கென ஒரு ஃபார்முலாவே பின்பற்றப்படுகிறது. Salary for pension x Service for pension / 70, இதில் Salary for pension என்பது கடந்த 60 மாதங்களில் உங்களுடைய சராசரி சம்பளத்தை குறிக்கிறது. அதாவது நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பு இருக்கக்கூடிய அந்த கடைசி ஐந்து ஆண்டுகளில் நீங்கள் வாங்கிய சராசரி சம்பளம் . Service for pension என்பது எத்தனை ஆண்டுகள் நீங்கள் இதில் பங்களிப்பு செய்தீர்கள் என்பதை குறிக்கிறது.
உதாரணமாக ஒரு நபர் 15,000 என்ற வரம்புக்கு உட்பட்டு பிஎஃப் கணக்கில் வரவு வைக்கிறார் . அதுவும் 30 ஆண்டுகள் வேலை பார்த்தவர் என்றால் 15000 x 30/70 இதன்படி அவருக்கு 6428 ரூபாய் மாத ஓய்வூதிய தொகையாக கிடைக்கும். 60 வயதுக்கு பின்னர் ஓய்வூதிய தொகை கிடைக்க தொடங்கும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications