வருமான வரி தாக்கல் முதல் பல முக்கியப் பணிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் முக்கியமான ஒன்று, ஒவ்வொரு ஊழியர்களுக்கு அதிகளவிலான பயன்களை அளிக்கும் பிஎப் கணக்கிற்கான ஈ-நாமினேஷன் செய்வது.
பிஎப் கணக்கு
பிஎப் கணக்கின் மூலம் பல நன்மைகள் நமக்கு மட்டும் அல்லாமல் நம்மைச் சார்ந்து இருப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் EPFO அமைப்பு அனைத்து பிஎப் கணக்காளர்களுக்கும் தங்களது பிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் பூர்த்த செய்ய வேண்டும் எனக் கூறிவந்தது.
டிசம்பர் 31
ஆனால் இதை யாரும் செய்யாத காரணத்தால் சில மாதங்களுக்கு முன்பு டிசம்பர் 31க்குள் அனைத்து பிஎப் கணக்குகளுக்கும் ஈ-நாமினேஷன் செய்யப்பட்ட வேண்டும் என உத்தரவிட்டது.
டிசம்பர் 31க்குப் பின்
இந்நிலையில் டிசம்பர் 31ஆம் தேதியை நெருங்கியுள்ள நிலையில் ஈபிஎப்ஓ அமைப்பு தனது டிவிட்டரில் டிசம்பர் 31க்கு பின்பும் ஈ-நாமினேஷன் செய்யலாம் என அறிவித்துள்ளது. ஆனால் இன்றே செய்துவிடுங்கள் என்ற அன்பு கட்டளையையும் விடுத்துள்ளது.
இணையம் வாயிலாக
பிஎப் கணக்கிற்கு இணையம் வாயிலாகவே நாமினியை நியமிக்கலாம். இப்படி நியமிக்கும் போது பிஎப் கணக்காளரின் பிஎ பணம், EPS பணம், EDIL திட்டத்திற்கான பணம் ஆகிய அனைத்தும் நாமினியாக நியமிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும், இது கிட்டதட்ட எல்ஐசி போன்றது. அதனால் மறக்காமல் அனைவரும் செய்துவிடுங்கள். பஎப், ஈபிஎஸ் தெரியும் அது என்ன EDLI.
EDLI என்றால் என்ன
ஈபிஎப்ஓ அமைப்பு, ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம் (Employees' Deposit Linked Insurance (EDLI)) சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாதுகாப்பை ஊழியர்களுக்கு ஒரு ரூபாய் கூடச் செலவு இல்லாமல் அளிக்கிறது. இது அனைத்து பிஎப் கணக்காளர்களுக்கும் இலவசமாகவும், கட்டாயமாகவும் வழங்கப்படுகிறது.
7 லட்சம் ரூபாய்
ஒரு பிஎப் கணக்காளர் இயற்கையாகவோ, விபத்து மற்றும் உடல்நல கோளாறு காரணமாகவோ மரணம் அடைந்தால், இவர் பிஎப் கணக்கில் நாமினியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரையிலான தொகை இந்த EDLI திட்டம் மூலம் கிடைக்கும்.
ஈ-நாமினேஷன் செய்வது எப்படி
படி 1: முதல் ஈபிஎப் இணையதளத்திற்குச் செல்லுங்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php
படி 2: அதில் சர்வீசஸ் என்ற டேப்-ஐ கிளிக் செய்யுங்கள்
படி 3: அதன் பின் ஊழியர்களுக்கான பிரிவைத் தேர்வு செய்யுங்கள், அதாவது 'For Employees' என்பதைத் தேர்வு செய்யுங்கள்
படி 4: அதன் பின்பு இத்தளம் புதிய இணையப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும், அதில் இடதுபுறம் கீழே சர்வீசஸ் என்ற டேப் கீழ் Member UAN/Online Service (OCS/OTCP) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 5: இத்தளம் உங்களைப் பிஎப் கணக்கின் தளத்திற்குக் கொண்டு செல்லும், அங்கே உங்களது UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா கோடு ஆகியவற்றைப் பதிவு செய்து உள்நுழையுங்கள்.
படி 6: பொதுவாக அனைத்து பிப் கணக்குகளுக்கும் லாக்இன் செய்யப்பட்ட உடனே ஈ-நாமினேஷன் குறித்து ஒரு அலர்ட் மெசேஜ் வருகிறது. அப்படி அலர்ட் மெசேஜ் பெறாதவர்கள் 'Manage' என்ற டேப்-ஐ கிளிக் செய்து அதில் வரும் ஈ-நாமினேஷன் என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 7: குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் yes என்பதைக் கிளிக் செய்யுங்கள்
படி 8: 'Add Family Details' என்பதைக் கிளிக் செய்யுங்கள். இத்தளத்தில் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் கிளிக் செய்ய முடியும்.
படி 9: இதன் பின்பு நாமினேஷன் தகவல் என்பதைக் கிளிக் செய்யுங்கள். இதில் யாருக்கு எவ்வளவு தொகையைப் பிரித்துக் கொடுக்கலாம் என்பதைத் தேர்வு செய்ய முடியும்.
படி 10: தகவல்களைப் பூர்த்திச் செய்த உடன் தரவுகளைச் சேமிக்க 'Save EPF Nomination' என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
படி 11: அடுத்தப் பக்கத்தில் நீங்க 'E-sign' செய்ய வேண்டும், அதற்காக OTP பெற வேண்டும். ஆதார் - பான்- பிஎப் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும்.
படி 12: மொபைல் எண்ணுக்கு வந்த OTP-ஐ பதிவு செய்தால் போதும் ஈ-நாமினேஷன் முடிந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications