ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தீபாவளியை முன்னிட்டு தனது ஊழியர்களுக்குப் போனஸ் தொகையை அறிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு அமைப்பாக விளங்கும் EPFO அக்டோபர் 19 தேதி வெளியிட்ட அறிக்கையில் தனது அனைத்து குரூப் 'சி' மற்றும் குரூப் 'பி' ஊழியர்களுக்கும் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இந்தப் போன்ஸ் அறிவிப்பு மூலம் EPFO அமைப்பின் ஊழியர்கள் உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் (PLB) தொகையாக அதிகப்படியாக 13,806 ரூபாய் அளவிலான தொகையை அளிக்க உள்ளது.
EPFO அமைப்பு
2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தகுதியான குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்களுக்கு, உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ் தொகை அதிகப்படியாக 60 நாட்கள் ஊதியத்திற்குச் சமமான தொகையைப் போன்ஸ் ஆக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
13,806 ரூபாய்
இதன் மூலம் 2021-22 ஆம் ஆண்டிற்கான பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் குரூப் சி மற்றும் குரூப் பி ஊழியர்கள் 13,806 ரூபாய் அளவிலான தொகையைப் போனஸ் ஆகப் பெற உள்ளனர். இது EPFO ஊழியர்களுக்குத் தீபாவளிக்குக் குட்நியூஸ் ஆக மாறியுள்ளது.
PLB கணக்கீடு
குரூப் சி மற்றும் குரூப் பி பிரிவில் இருக்கும் ஒரு தகுதியான பணியாளர், இந்தப் பார்முலா படி உற்பத்தித்திறன்-இணைக்கப்பட்ட போனஸ் தொகையைப் பெறுவார்கள். அதாவது ஒரு ஊழியரின் சராசரி ஊதியங்கள் x போனஸ் நாட்களின் எண்ணிக்கை / 30.4 அதன் அடிப்படையில் தான் போனஸ் கிடைக்கும்.
PLB முன்பணம் செலுத்தும் தேதி
2021-22 ஆம் ஆண்டிற்கான PLB க்கு எதிரான முன்பணத் தொகையை அக்டோபர் 20, 2022 க்குள் தகுதியான ஊழியர்களுக்குச் செலுத்தப்படலாம் என EPFO தெரிவித்துள்ளது.
பிஎப் வட்டி தொகை
மத்திய அரசு அறிவித்தது படி 2022 ஆம் நிதியாண்டுக்கான வைப்புத் தொகைக்கு 8.1 சதவீதம் வட்டி வருமானத்தை அளிக்க உள்ள நிலையில் பிஎப் கணக்கில் 10 லட்சம் ரூபாய் வைத்துள்ளவர்களுக்கு 81000 ரூபாய் அளவிலான வட்டி தொகையைப் பெற உள்ளனர். இதுவே பிஎப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் இருந்தால் உங்கள் 8100 ரூபாய் வட்டி பணம் கிடைக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications