ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில் EPFO அமைப்பின் கீழ் இணைந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19.94 லட்சத்தை எட்டியுள்ளதாக சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 2018-ஆம் ஆண்டில் EPFO அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து சேர்ந்த உறுப்பினர்களை விட இந்த ஜூலை மாதம் அதிக அளவிலான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசாங்கத் தரவுகளின்படி, EPFO அமைப்பிலிருந்து வெளியேறிய சுமார் 14.65 லட்சம் உறுப்பினர்கள் ஜூலை மாதம் மீண்டும் இணைந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 15.25 சதவீதம் அதிகமாகும். தங்கள் பங்களிப்புகளை திரும்பப் பெறுவதற்கு பதிலாக, அவற்றை மீண்டும் சேமித்து, நீண்டகால நிதி பாதுகாப்பை பராமரிக்கும் வகையில் EPFO அமைப்பில் இணைந்துள்ளனர்.

EPFO திட்டத்தில் ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டு 10.52 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இது, ஜூன் மாதம் 2024-ஆம் ஆண்டு சேர்ந்த உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் 2.66% அதிகரிப்பையும், ஜூலை மாதம் 2023-ஆம் ஆண்டு சேர்ந்த உறுப்பினர்களோடு ஒப்பிடுகையில் 2.43% அதிகரிப்பையும் குறிக்கிறது. வேலைவாய்ப்பு அதிகரிப்பு, பணியாளர் நலன்கள் மற்றும் EPFO திட்டங்களுக்கான விழிப்புணர்வு அதிகரிப்பு ஆகியவை இந்த புதிய உறுப்பினர்கள் சேர்ப்பிற்கு காரணம் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் இணைந்த 10.5 லட்சம் புதிய EPF உறுப்பினர்களில், 18-25 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் பங்கு ஜூன் மாதத்தில் இருந்து 59.1 (606,000) சதவீதத்தில் இருந்து 59.41 சதவீதமாக (625,000) அதிகரித்துள்ளது. இந்த வயது பிரிவைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுவாக வேலைச் சந்தையில் முதல் முறையாக பங்கேற்பவர்களாக இருப்பார்கள். இது இன்றைய தலைமுறையினர் சேமிப்பின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறது.
பெண் உறுப்பினர்கள்: ஜூலை மாதம் 2024-ஆம் ஆண்டில் சுமார் 3.05 லட்சம் புதிய பெண் உறுப்பினர்கள் EPFO திட்டத்தில் சேர்ந்துள்ளனர், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.94% அதிகரிப்பைக் குறிக்கிறது. இது, பெண் பங்கேற்பு அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.
மாநில வாரியான பங்களிப்பு: மாநிலங்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஹரியானா மற்றும் குஜராத் ஆகியவை ஜூலை மாதத்தில் 59.27 சதவீத உறுப்பினர்களைச் சேர்ந்துள்ளன. அதன்படி மொத்தம் 11.82 லட்சம் உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மொத்த புதிய உறுப்பினர்களில் 20.21 சதவீதம் பங்களித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உற்பத்தி, கணினி சேவைகள், கட்டுமானம், பொறியியல், வங்கி, தனியார் துறை ஊடகங்கள் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க உறுப்பினர் வளர்ச்சி காணப்பட்டது. குறிப்பாக ஒப்பந்ததாரர்கள் மற்றும் பாதுகாப்பு சேவைகள் உள்ளிட்ட சேவைகளிலிருந்து 38.91% பேர் சேர்ந்துள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications