ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) பணி புரியும் தொழிலாளர்களுக்கு EPF திட்டத்தை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் போது ஒரு பகுதியை சேமிக்க முடியும். இதில் ஒரு பகுதி PF கணக்கிலும் மற்றொரு பகுதி தொழிலாளர் பென்ஷன் திட்டத்திலும் டெபாசிட் செய்யப்படுகிறது. ஏதேனும் அவசர காலங்கள் ஏற்பட்டால் PF பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்தக் கட்டுரையில் உங்கள் PF கணக்கில் இருக்கும் பணத்தை எப்போது எடுக்கலாம்? எவ்வளவு எடுக்கலாம்? என்பதைப் பார்ப்போம்.
EPF திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், ஓய்வூதியத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில், சம்பளம் பெறாமல் இருக்கும்போது, அவர்களுக்கு தேவைப்படும் வருமானத்தை வழங்குவதாகும். ஓய்வுக்கு முன்பு, சில சூழ்நிலைகளைப் பொறுத்து, தொகையை ஓரளவு அல்லது முழுமையாக திரும்பப் பெற EPFO அமைப்பு அனுமதிக்கிறது.

PF விதிகள்: EPFO அமைப்பு PF தொடர்பான விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒரு ஊழியர் தனது PF தொகையை எடுப்பது தொடர்பான முக்கிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
வேலையின்மை: ஒரு ஊழியர் ஏதேனும் காரணத்தினால் வேலை இழப்பை சந்தித்து ஒரு மாதத்திற்கு மேலாக வேலையில்லாமல் இருந்தால் அவர் தனது பிஎஃப் கணக்கில் இருந்து 75 சதவீதம் வரை தொகையை எடுக்கலாம்.
நிறுவனம் ஆறு மாதங்கள் வரை மூடப்பட்டால்: ஒரு ஊழியர் பணி புரியும் நிறுவனம் ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து 6 மாதங்கள் மூடப்பட்டிருந்தால் PF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
பணிநீக்கம்: ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து திடீரென வேலையில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் PF கணக்கில் உள்ள பணத்தை எடுக்க ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் ஊழியர்கள் PF கணக்கில் இருந்து 50% வரை பணம் எடுக்கலாம்.
பிஎஃப் தொகையை திரும்ப பெற எப்படி விண்ணப்பிப்பது?: PF தொகையை திரும்பப் பெறுவதற்கு ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு PF தொகை உங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிட்டால்.. க்ளைம் விவரங்கள் குறித்து ஆன்லைனில் எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.
பிஎஃப் தொகை கையில் கிடைக்க எத்தனை நாட்கள் ஆகும்?: இதற்கு முன்னதாக விண்ணப்பித்து 15 முதல் 25 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது PF உறுப்பினர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் எளிதில் தேவைப்படும் போது பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஏடிஎம் கார்டுகள் வழங்குவதற்காக EPFO அமைப்பு செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications