ஆஹா! அருமையான மாற்றங்களைக் கொண்டு வந்த EPFO அமைப்பு.. ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!

சென்னை: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தங்கள் உறுப்பினர்களுக்கு சேவையை மேம்படுத்தும் வகையில், EPF கணக்கு மற்றும் கிளைம் செயல்முறைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் மே மாதத்தில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

EPFO அமைப்பு, தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மே 2024-இல், EPF கோரிக்கை செயல்முறைகளை எளிமைப்படுத்துவதற்காக சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 ஆஹா! அருமையான மாற்றங்களைக் கொண்டு வந்த EPFO அமைப்பு.. ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!


மல்டி லொகேஷன் கிளைம் செட்டில்மெண்ட் (Multi-location Claim Settlement): முன்னதாக, உறுப்பினர் கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்திலேயே PF கிளைம் தாக்கல் செய்ய முடியும். புதிய விதிகளின்படி, உறுப்பினர் வேலை செய்யும் எந்த இடத்திலுள்ள EPFO அலுவலகத்திலும் கிளைம் தாக்கல் செய்யலாம். இது உறுப்பினர்களுக்கு வசதியாக இருக்கும்.

இறப்பு கிளைம்கள் (Faster Death Claims): இறந்த ஒருவரின் PF கோரிக்கைகளை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தை குறைக்கும் வகையில் EPFO புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. இதன்படி, இறந்த உறுப்பினரின் ஆதார் எண், PF கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றாலும், இறந்த உறுப்பினரின், குடும்ப உறுப்பினர் PF பணத்தைக் கோர முடியும். இதனால் இறந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு தாமதமின்றி பணம் கிடைக்கும். இந்த புதிய விதிமுறை, ஆதார் விவரங்கள் சரியாக இருந்தும், ஆதார் எண் PF கணக்குடன் இணைக்கப்படவில்லை என்னும் பட்சத்தில் மட்டுமே பொருந்தும்.

சான்றிதழ் பதிவேற்ற தேவை குறைப்பு (Relaxation in uploading documents): ஆன்லைனில் PF கிளைம் கோரிக்கை தாக்கல் செய்யும் போது கட்டாயமாக காசோலை மற்றும் வங்கி கணக்கு போட்டோக்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். தற்போது இதில் EPFO அமைப்பு மாற்றங்களைச் செய்துள்ளது. இதன்மூலம் ஆன்லைன் கோரிக்கைகள் வேகமாக தீர்க்கப்படுவதோடு, காசோலை படம் அல்லது வங்கி கணக்கு புத்தகத்தை பதிவேற்றம் செய்யாத காரணத்தால் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆட்டோ செட்டில்மென்ட் தொகை உயர்வு (Increased Auto-Settlement Amount): முன்னதாக, ரூ. 50,000 வரையிலான கோரிக்கைகளே மனித தலையீடு இல்லாமல் பெறும் வசதியாக இருந்தது. ஆனால், புதிய விதிமுறைகளின்படி, இந்த தொகை ரூ.1 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, மருத்துவம் (Rule 68J), கல்வி மற்றும் திருமண செலவுகள் (Rule 68K), வீடு வாங்குதல் (Rule 68B) ஆகியவற்றுக்கான கோரிக்கைகள் ரூ.1 லட்சம் வரை இருந்தால், அவை எந்தவித மனித தலையீடும் இல்லாமல் தானாகவே தீர்க்கப்படும்.

இந்த மாற்றங்கள் EPFO உறுப்பினர்களுக்கு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். எளிமையான மற்றும் வேகமான கிளைம் செயல்முறை மூலம், தேவைப்படும் நேரத்தில் நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+