அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து பல பெரிய முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழும முதலீடுகள் குறித்து மறுஆய்வு செய்வது மட்டும் அல்லாமல், ஏற்கனவே முதலீடு செய்து இருப்பில் வைத்துள்ள பங்குகளை என்ன செய்வது என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்த வேளையில் தொடர்ந்து அதானி குழுமத்தின் 2 நிறுவனத்தில் ஒரு பெரிய முதலீடு செய்யப்பட்டு வருகிறது, இதில் அதானி எண்டர்பிரைச்ஸ் நிறுவனமும் ஒன்று. இதை விட முக்கியமாக இந்த முதலீடுகள் வருகிற செப்டம்பர் மாதம் வரையில் தொடரும் என்ற நிலை உள்ளது.
அதானி குழுமம் பெரும் சரிவை சந்தித்திருக்கும் வேளையில் EPFO அமைப்பு அதன் டிரஸ்டீஸ் தலையீடு இல்லையெனில் செப்டம்பர் மாதம் வரையில் முதலீடு செய்ய உள்ளதாகவும், இதற்கான முடிவை இன்று தொடங்கும் EPFO டிரஸ்டீஸ் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என தி ஹிந்து தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வகைப்படுத்தப்பட்ட துறையை சார்ந்த சுமார் 27.73 கோடி ஊழியர்களின் EPF சேமிப்புகளை நிர்வகிக்கிறது. இந்த கார்பஸ் தொகையில் 15 சதவீதத்தை NSE நிஃப்டி 50 மற்றும் BSE சென்செக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ETF -களில் முதலீடு செய்து வருகிறது.
பங்குச்சந்தை முதலீடு
வங்கி அல்லாது நிதி அமைப்புகளில் LIC-க்கு பின்பு 2வது பெரிய முதலீட்டு நிறுவனமாக இருக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது 85 சதவீத பங்குச்சந்தை முதலீட்டை, ETF வாயிலாக நிஃப்டி 50 பங்குகளில் முதலீடு செய்யப்படுகிறது.
அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ்
நிஃப்டி 50 பங்குகள் பட்டியலில் கடந்த செப்டம்பர் மாதம் அதானி எண்டர்பிரைசஸ் சேர்க்கப்பட்டது, இது மார்ச் 30 உடன் துவங்கி அடுத்த 6 மாதம் இப்பட்டியலில் இருக்கும். இதேபோல் அதானி போட்ர்ஸ் & SEZ 2015 செப்டம்பர் மாதத்தில் இருந்து இருக்கிறது, இதுவும் அடுத்த 6 மாதம் இப்பட்டியலில் இருக்கும்.
நீலம் ஷமி ராவ்
தி ஹிந்து பத்திரிக்கை மார்ச் 23 ஆம் தேதி EPFO அமைப்பின் கமிஷ்னர் நீலம் ஷமி ராவ்-யிடம் அதானி குழும முதலீடுகள் குறித்து ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டோ அல்லது புதிய முதலீட்டுகள் நிறுத்துவது குறித்து பண்ட் மேனேஜர்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளதா என கேட்டப்போது அதற்கு எவ்விதமான பதிலும் அவர் அளிக்கிவில்லை.
38000 கோடி ரூபாய்
மார்ச் 2022 வரையில் காலக்கட்டத்தில் EPFO அமைப்பு சுமார் 1.57 லட்சம் கோடி ரூபாய் தொகையை ETF-ல் முதலீடு செய்துள்ளது. 2022-23 ஆம் நிதியாண்டில் 38000 கோடி ரூபாயை புதிதாக முதலீடு செய்யப்பட்டு இருக்கலாம், காரணம் இக்காலக்கட்டத்தில் EPF கணக்கில் சுமார் 2.54 லட்சம் கோடி ரூபாய் வைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
நிஃப்டி 50 பட்டியல்
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் நிஃப்டி 50 பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மாதம் மட்டுமே ஆன நிலையில் இந்நிறுவனத்தில் EPFO பங்கீடு சற்று குறைவாகவே இருக்கும், ஆனால் அதானி போர்ட்ஸ் & SEZ நிறுவனத்தில் முதலீடுகள் சற்று அதிகமாகவே இருக்கும்.
ஹிண்டன்பர்க் நிறுவனம்
ஜனவரி 24 ஆம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கை மூலம் அதன் பங்கு மதிப்பில் பெரும் சரிவை சந்தித்த நிலையில், EPFO சிறிய அளவிலான தொகையை மட்டுமே முதலீடு செய்திருந்தாலும் இழப்பு அதிகமாகவே இருக்கும்.
2 நாள் கூட்டம்
2022-2023 ஆம் நிதியாண்டுக்கான ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதத்தை நிர்ணயிப்பதற்காக, EPFO அமைப்பின் மத்திய கருவூல குழு திங்கள்கிழமை ஒரு முக்கியமான கூட்டத்தை துவங்கியுள்ளது. இக்கூட்டம் டெல்லியில் அடுத்த இரண்டு நாள் நடத்தப்பட உள்ளது, இக்கூட்டத்தில் பல கோடி மாத சம்பளக்காரர்களின் EPF கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு எவ்வளவு வட்டி விகிதம் அளிக்க உள்ளது என முடிவு செய்யப்படும்.
EPFO டிரஸ்டி
இந்த கூட்டத்தில் அதானி குழும முதலீடுகள் குறித்து முடிவு எடுக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது, இக்கூட்டத்திற்கு பின்பு ஓய்வூதிய தொகை மீதான வட்டி விகிதம் அறிவிப்பு வருவது மட்டும் அல்லாமல் அதானி குழும முதலீடுகள் குறித்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது என EPFO டிரஸ்டி தரப்பில் கூறப்பட்டு உள்ளதாக ஹிந்து தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications