இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு ஓய்வு காலத்திற்கான நிதி பாதுகாப்பை வழங்குவதற்காகவே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தொழிலாளர் பெயரில் பிஎஃப்கணக்கு தொடங்கப்படும். இந்த பிஎஃப் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ஊழியர் சார்பாகவும் அவர் வேலை செய்யக்கூடிய நிறுவனம் சார்பாகவும் சம்பளத்தில் ஒரு கணிசமான சதவீத தொகை வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு ஊழியரின் கணக்கிலும் சேரக்கூடிய பிஎஃப் பணத்திற்கு மத்திய அரசு வட்டி வழங்குகிறது.

ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான வட்டியும் மார்ச் 31ஆம் தேதி கணக்கிடப்பட்டு ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த வட்டி என்பது அரசால் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது பிஎஃப் கணக்குகளுக்கு 8.25% வட்டி என்பது கிடைக்கிறது. இதே வட்டி இந்த ஆண்டும் வழங்கப்படுமா என்ற முடிவு மார்ச் முதல் வாரத்தில் நடைபெற இருக்கக்கூடிய பிஎஃப் அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்படும்.
இதனை அடுத்து அரசின் ஒப்புதல் பெற்று பிஎஃப் கணக்குகளில் இந்த வட்டி தொகையை கணக்கிட்டு வரவு வைத்து விடுவார்கள். அந்த வகையில் பார்க்கும்போது இந்தியாவில் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் லட்சக்கணக்கான தனியார் ஊழியர்களுக்கு அவர்களுடைய பிஎஃப் கணக்கில் அடுத்த மாத இறுதியில் வட்டி பணம் கிடைக்கப் போகிறது.
பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்தைப் பொறுத்து நமக்கு கிடைக்கக்கூடிய வட்டி தொகை என்பது மாறுபடும். உதாரணமாக உங்களுடைய பிஎஃப் கணக்கில் ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொண்டால் சராசரியாக உங்களுக்கு 40,000 வட்டியாகவே கணக்கில் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த பணம் காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடையும் என்பதால் ஓய்வு பெறும் காலத்தில் இந்த ஐந்து லட்சம் ரூபாய் பணமே உங்களுக்கு ஒரு பெரிய தொகையாக வளர்ந்திருக்கும்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த நிதியாண்டுக்கான பிஎஃப் கணக்குக்கான வட்டி தொகையை மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. ஏனெனில் கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.25% குறைத்தது. இதன் காரணமாக வங்கிகள் கடன்களுக்கான வட்டியையும் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டியையும் குறைத்தன. எனவே இதையே பின்பற்றி பிஎஃப் அமைப்பு வட்டி விகிதங்களை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக ஒரு சாரார் கூறுகின்றனர்.
அதே வேளையில் வட்டி மாற்றம் இல்லாமல் தொடர்ந்து இதே நிலையில் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர். எது எப்படி இருந்தாலும் மார்ச் 2-ம் தேதி நடைபெறக்கூடிய கூட்டத்தில் இறுதி முடிவு என்பது எடுக்கப்பட்டு. தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த நிதியின் மதிப்பு 28 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது, இந்த பணத்தை அரசு பத்திரங்கள், மற்ற கடன் கருவிகள் மற்றும் ஈடிஎஃப்களில் முதலீடு செய்கிறார்கள்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications