இந்தியாவில் லட்சக்கணக்கான சம்பளதாரர்களுக்கு ஓய்வு காலத்தில் சிறந்த நிதி பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் திட்டமான ஈபிஎஃப்ஓ (EPFO) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .
ஊழியர் பணி ஓய்வு பெறும் வரை பிஎஃப் கணக்கில் ஊழியரும் அவர்கள் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் பங்களிப்பு செய்யும். பிஎஃப் கணக்கில் இருக்கக்கூடிய பணத்திற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இது தவிர ஓய்வூதிய பலன்கள், காப்பீட்டு பலன்கள் என தொடர்ச்சியாக பல்வேறு பலன்களை ஈபிஎஃப்ஓ அமைப்பு தொழிலாளர்களுக்கும் அவர்கள் சார்ந்த குடும்பத்தினருக்கும் வழங்கி வருகிறது .

அந்த வகையில் மிக முக்கியமான ஒரு திட்டம் தான் EDLI employee deposit linked insurance அதாவது தொழிலாளர் வைப்பு தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டம். இதில் சில முக்கியமான மாற்றங்களை epfo கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டத்தில் இதற்கு முன்பு இருந்த கடுமையான நிபந்தனைகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இது லட்சக்கணக்கான ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பெரிய அளவில் நிம்மதி தருவதாக மாற்றப்பட்டிருக்கிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் epfo அமைப்பு ரீதியாகவும் பிஎஃப் கணக்கினை மேலாண்மை செய்வதிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. கூடிய விரைவில் ஏடிஎம் மூலமாகவே பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கக்கூடிய வசதிகளையும் கொண்டு வர இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் இது பயன்பாட்டிற்கு வந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தொழிலாளர் வைப்பு தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தில் முக்கிய மாற்றத்தை அறிவித்திருக்கிறது. இதன்படி ஊழியர்கள் பணியின்போது இறந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இனி குறைந்தபட்சம் 50,000 ரூபாய் காப்பீடு தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் பிஎஃப் கணக்கில் 50,000 ரூபாய் இல்லை என்றாலும் கூட இந்த காப்பீடு தொகை 50,000 ரூபாய் கிடைப்பது உறுதி. அதாவது அனைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் 50,000 ரூபாய் காப்பீடு தொகை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறையின் படி ஒரு ஊழியர் பணியின்போது இறந்தால் அவரது நாமினிக்கு குறைந்தபட்சம் 50,000 ரூபாய் காப்பீடு கிடைக்கும். இதற்கு முன் கணக்கில் 50,000 ரூபாய் இல்லாவிட்டால் நாமினிக்கு இறப்பு பலன்கள் கிடைக்காது என இருந்தது. அதனை தற்போது தளர்த்தி இருக்கிறார்கள் . மேலும் ஒரு ஊழியர் தொடர்ச்சியாக 12 மாதங்கள் வேலை செய்திருந்தால் தான் இந்த காப்பீடு கிடைக்கும் என்பது இதற்கு முன்பு இருந்த விதிமுறை அதை தற்போது நீக்கி இருக்கின்றனர்.
எனவே தொடர்ச்சியாக 12 மாதங்கள் வேலை செய்யாமல் அதாவது ஓராண்டு காலம் கூட நீங்கள் pf பங்களிப்பு செய்யாமல் இருந்தால் கூட இந்த குறைந்தபட்ச காப்பீடு தொகை குடும்பத்தினருக்கு கிடைக்கும். மேலும் ஒரு ஊழியர் இரண்டு வேலைகளுக்கு இடையே 60 நாட்கள் வரை இடைவெளி இருந்தால் அது இடைவெளியாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதையும் தொடர்ச்சியாக தொடர்ச்சியான சேவையாகவே கருதுவோம் எனக் கூறியிருக்கிறது .


Click it and Unblock the Notifications