ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி உண்டு.. 8.5% வட்டி கிரெடிட் ஆகலாம்.. எப்போது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 6 கோடி பேருக்கும் மேலாக ஊழியர்களுக்கு, விரைவில் 8.5% வட்டி விகிதம் கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த வட்டி விகிதமானது கடந்த ஜூலை மாதமே கிடைக்கலாம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் கொரோனாவின் காரணமாக இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில் விரைவில் இந்த வட்டி விகிதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் கிரெடிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஃப் வாடிக்கையாளர்களா நீங்கள்.. பிஎஃப் கணக்கில் இந்த தவறுகளை எல்லாம் தவிருங்க.. !

ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

இது குறித்து ட்விட்டரில் பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள EPFO அமைப்பு, EPFO கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும்போது மொத்தமாக ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும். இதனால் யாருக்கும் வட்டி இழப்பு என்பது இருக்காது. ஆக் ஊழியர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.

எப்போது வட்டி?

எப்போது வட்டி?

எனினும் இந்த வட்டி தொகையானது எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்தான எந்த தகவலும் கூறப்படவில்லை. கடந்த 2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல், முந்தைய ஆண்டினை போலவே 8.5% ஆகவே தொடர்ந்து வருகின்றது.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை
 

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

கடந்த 2019 - 20ம் நிதியாண்டிலேயே ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு வட்டி விகிதத்தை 8.50% ஆக குறைத்தது. இதுவே 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வட்டி விகிதம். எனினும் இந்த வட்டி விகிதமே இன்னும் ஊழியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்பது கவலையளிக்கும் ஒரு விஷயமாக இருந்து வருகின்றது.

பல கோடி பேர் பலன்

பல கோடி பேர் பலன்

நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் EPF கொண்டுள்ளது. ஆக வட்டி குறித்தான அறிவிப்பினால் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயன் அடைவார்கள் எனலாம். உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் எனலாம்.

அதெல்லாம் சரி, இந்த பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவையை எப்படி தெரிந்து கொள்ளலாம்? ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி உண்டா? வாருங்கள் பார்க்கலாம்.

எப்படி தெரிந்து கொள்வது?

எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிலுள்ள இருப்பை எப்படி தெரிந்து கொள்வது. ஒன்று உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

Umang app ஆப் மூலம் எப்படி?

Umang app ஆப் மூலம் எப்படி?

தொழிலாளர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி தொகையினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்தலாம்.

அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட ஒரு ஆப் தான் உமாங் ஆப். ஒருவர் இந்த ஆஃப் மூலம் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். அதோடு இதனைப் பயன்படுத்தி உங்களது தொகை இருப்பினையும் தெரிந்து கொள்ளலாம்.

உங்களது கணக்கிலிருந்து க்ளைம் செய்ய உரிமை கோரலாம். க்ளைம் செய்து டிராக் செய்யலாம். உங்களது மொபைல் எண்ணினை பயன்படுத்தி, இந்த பதிவினை செய்து கொள்ள முடியும்.

ஆன்லைனில் எப்படி?

ஆன்லைனில் எப்படி?

இப்போது ஊழியர்கள் இணையதளத்திலும் அணுக முடியும். இதற்காக ஊழியர்கள் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த இணையதளத்தில் our services என்ற ஆப்சனை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து member passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதில் உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாகின் செய்து கொள்ள வேண்டும். பின்பு உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பார்த்துக் கொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலம்?

எஸ்எம்எஸ் மூலம்?

ஊழியர்கள் அவர்களது வருங்கால வைப்பு நிதியினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

நீங்கள் இந்த மொபைல் எண்ணிக்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும்.

இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் வழங்கப்படுகிறது.

EPFO அதன் பதிவுகளில் கிடைக்கும் உறுப்பினர்களின் விவரங்களையும் அனுப்புகிறது. இதன் மூலமும் உங்களது மொத்த இருப்பினை தெரிந்து கொள்ள முடியும்.

மிஸ்டு கால் மூலமா?

மிஸ்டு கால் மூலமா?

யுஏஎன் நம்பரினை பதிவு செய்திருந்தால், 011-22901406 என்ற எண்ணிக்கு, உங்களது பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து மிஸ்டு கால் கொடுத்தும் பிஎஃப் இருப்பினை தெரிந்து கொள்ளலாம்.

உங்களின் UAN எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் உறுதி படுத்திக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

EPFO may credit 8.5% EPF interest soon: how to check balance; check full details here

EPFO latest updates.. EPFO may credit 8.5% EPF interest soon: how to check balance through online, mobile SMS, missed call, check full details here
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X