நம் PF பணம் இனி ஸ்டார்ட் அப் முதலீடுகளுக்கு செல்லும்: EPFO-இன் புதிய வியூகம்..!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, நம் பிஎஃப் பணத்தை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தை கொண்டு தான் வட்டி தொகையை வழங்குகிறது. இந்நிலையில் பிஎஃப் பணத்தை வழக்கமான முறையை விட மாற்று திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் விரைவில் நம் பிஎஃப் பணம் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்யப்பட உள்ளது.

ஈபிஎஃப்ஓ-வின் புதிய வருடாந்திர வரத்து தொகையில் 3% வரை இந்த நிதிகளுக்கு ஒதுக்கப்படலாம் என பரிசீலிக்கப்பட்டு அதற்கான நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஈபிஎஃப்ஓ அமைப்பு கிட்டத்திட்ட 30 கோடி உறுப்பினர்களின் 30 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை நிர்வகித்து வருகிறது. இந்த பணத்தை கொண்டு முறைப்படி வட்டி வழங்க ஏதுவாக புதிய திட்டங்களில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

நம் PF பணம் இனி ஸ்டார்ட் அப் முதலீடுகளுக்கு செல்லும்: EPFO-இன் புதிய வியூகம்..!!

செபியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் வகை I மற்றும் வகை II ஏ.ஐ.எஃப் (AIF) நிதி வகைகளில் ஈபிஎஃப்ஓ தனது புதிய ஆண்டு நிதியில் இருந்து 3% வரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. பாரம்பரியமான கடன் பத்திர முதலீடுகளை தாண்டி, ஈபிஎஃப்ஓ அதிக லாபம் தரக்கூடிய ஸ்டார்ட்அப்கள் மற்றும் பிற முதலீட்டு தளங்களை நோக்கி செல்வதையே இது காட்டுகிறது.

Also Read

ஈபிஎஃப்ஓ முதலீட்டு குழுவின் இந்த பரிந்துரை, நவம்பர் மாதம் தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் கூடவுள்ள மத்திய அறங்காவலர் குழுவின் ஒப்புதலுக்காக வைக்கப்படவுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால் நம் பிஎஃப் பணம் இனி பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஸ்டார்ட்அப்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் , தனியார் ஈக்விட்டி நிதிகள், ரியல் எஸ்டேட் நிதிகள் மற்றும் தனியார் கடன் நிதிகள் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும்.

Recommended For You

ஈபிஎஃப்ஓ அமைப்பு ஏஐஎஃப் நிதிகளில் குறைந்தபட்சம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மேலும் வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலீடு செய்வதற்கு கடுமையான தடை என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிஎஃப் அமைப்பு ஆண்டுதோறும் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வட்டியும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியமும் வழங்க வேண்டும். இது தடைபடாத வகையில் முதலீடுகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முதலீட்டு முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+