ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் 7.6 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் EPFO அமைப்பு தற்போது ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இனி எந்த ஒரு நிறுவனத்தின் சரிபார்ப்பு செயல்முறையும் இல்லாமல் மற்றும் EPFO அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் பெயர், பிறந்த தேதி போன்ற விவரங்களை ஊழியர்கள் ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம்.
அதோடு மேலும் ஒரு சிறப்பம்சமாக EPF டிரான்ஸ்ஃபர் செயல்முறையும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒரு நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு மாறும்போது EPF பணத்தை மாற்றுவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு நிறுவனத்தின் ஒப்புதல் தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஆதார் ஒடிபி-ஐ பயன்படுத்தி ஆன்லைனில் எளிதில் EPF ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா சனிக்கிழமை இந்த இரண்டு புதிய சேவைகளை அறிமுகப்படுத்தினார். EPFO அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருப்பதால் அவ்வப்போது பெயர் மாற்றம் செய்யும்போது மற்றும் ஈபிஎப் ட்ரான்ஸ்ஃபர் செய்யும்போது சில பிரச்சினைகள் எழும்.
இந்தப் பிரச்சினைகளில் 27 சதவீதம் உறுப்பினரின் விவரங்கள் மற்றும் கேஒய்சி சம்பந்தமான பிரச்சினைகளாகும். எனவே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இது போன்ற பிரச்சனைகள் அதிக அளவில் குறையும் என்றும் மண்டவியா தெரிவித்திருக்கிறார். அதோடு அதிக அளவிலான ஊழியர்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த புதிய வசதியினால் பயனடைவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் உறுப்பினர்களுக்கு தங்கள் தனிப்பட்ட விவரங்களில் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்துவதற்கு EPFO ஒப்புதல் மற்றும் முதலாளியின் சரிபார்ப்பு தேவைப்பட்டது. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம் 2017-ஆம் ஆண்டின் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு UAN நம்பர் வழங்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் தாங்களாகவே தங்கள் பெயர், பிறந்த தேதி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை திருத்திக் கொள்ளலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எந்த ஆதார ஆவணமும் தேவையில்லை.
ஆனால் ஆதார் இணைக்கப்படாத கணக்குகளாக இருந்தால் திருத்தம் செய்ய முதலாளியிடம் நேரடியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்ப்புக்குப் பிறகு இபிஎப்ஓ-வின் ஒப்புதலுக்கு அவை அனுப்பப்படும்.
ஆனால் ஒரு ஊழியரின் UAN பதிவை பணியமர்த்தப்படும் போது நிறுவனங்களே செய்திருந்தால் அப்போது சில பிழைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உதாரணமாக தந்தை பெயர், மனைவி பெயர், திருமண நிலை மற்றும் பிற விவரங்களை பதிவு செய்வதில் தவறுகள் ஏற்படலாம். இப்படி பிழைகள் ஏற்பட்டால் ஊழியர் ஆவணங்களுடன் ஆன்லைனில் கோரிக்கை வைக்க வேண்டும். இதனை முதலாளி சரிபார்த்து அதன் பிறகு மாற்றத்தை இபிஎப் அமைப்பிற்கு அனுப்ப வேண்டும்.
2025-ஆம் நிதியாண்டில் முதலாளிகளால் 40% கோரிக்கைகள் EPFO அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் 40 சதவீத கோரிக்கைகள் ஐந்து தினத்திற்குள், 47 சதவீத கோரிக்கைகள் 10 தினத்திற்குள் அனுப்பப்பட்டுள்ளன. இதனால் முதலாளிகள் எடுத்துக் கொண்ட சராசரி நேரம் 28 நாட்களாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆதார் ஒடிபி அடிப்படையிலான பெயர் திருத்தம் மற்றும் பிற விவரங்களை திருத்துவதற்கான அம்சம் 45 சதவீத ஊழியர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications