ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கு ஓய்வு கால நிதியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. EPFO அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு நன்மை அளிக்கும் விதமாக EPFO அமைப்பு பல மாற்றங்களைச் செய்யும். அப்படித்தான் PF திரும்பப் பெறுவதற்கான விதிகளிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளது.
தற்போது EPFO அமைப்பில் 7 கோடிக்கும் அதிகமான மக்கள் ஓய்வு கால நிதிக்காக சேமிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே EPFO அமைப்பின் புதிய வதிகள் குறித்து உறுப்பினர்கள் அனைவரும் தெரிந்து கொள்வது முக்கியம். முன்பை விட தற்போது PF பணத்தை திரும்பப்பெறும் செயல்முறை மிக எளிதாகவும், வேகமாகவும், டிஜிட்டல் முறையிலும் மாறிவிட்டது. நீங்களும் EPFO உறுப்பினராக இருந்து, உங்கள் PF பணத்தை எடுக்க விரும்பினால் இந்த 5 முக்கியமான நிபந்தனைகளை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் மற்றும் மொபைல் நம்பர்: முதலில் உங்களுடைய யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் UAN கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை நீங்கள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் PF தொகை எடுக்கும் போது உங்கள் மொபைல் நம்பருக்கு OTP கிடைக்கும். OTP சரிபார்ப்பு செயல்முறை PF பணம் எடுக்கும் செயல்முறையில் மிகவும் முக்கியம்.
ஆதார் நம்பர் EPFO கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்: உங்களுடைய ஆதார் நம்பர் EPFO அமைப்பில் இணைக்கப்பட வேண்டும். ஆன்லைனில் PF பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது உங்களுடைய அடையாளத்திற்காக ஆதார் நம்பரிலிருந்து ஓடிபி மூலம் ஈ-கேஒய்சி செயல்முறை செய்யப்படும். எனவே ஆதார் நம்பரை EPFO கணக்குடன் இணைக்காமல் பிஎப் திரும்பப் பெறுவது முடியாத காரியம்.
வங்கி கணக்கு: உங்கள் PF பணம் நேரடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு தான் வரும். எனவே உங்கள் வங்கி கணக்கு நம்பர், IFSC கோட் ஆகியவை EPFO தளத்தில் சரியாக வழங்கப்பட்டுள்ளதா? என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்.
பான் கார்டு: உங்கள் பணி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்து, நீங்கள் PF பணத்தை எடுக்க விரும்பினால் உங்கள் பான் கார்டு EPF பதிவுகளில் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும்.
பணியில் சேர்ந்த தேதி: EPFO அமைப்பில் நீங்கள் பணியில் சேர்ந்த தேதியை குறிப்பிட வேண்டும். இந்த தகவல் இல்லாவிட்டாலும் பிஎப் பணத்தை திரும்பப்பெறும் செயல்முறை பாதிக்கப்படலாம்.
இதைத் தவிர ஆன்லைனில் PF பணத்தை திரும்ப பெறுவதற்கு கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க தேவையில்லை என்று இபிஎப்ஓ இணையதளத்திலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எப்போது PF பணத்தை எடுக்கலாம்?: PF பணத்தை எடுப்பது பல காரணங்களுக்காக அனுமதிக்கப்படுகிறது. வீடு வாங்குவதற்கு, வீடு கட்டுவதற்கு, ஏதேனும் நோய் ஏற்பட்டால் எடுத்துக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினருக்கு பிரச்சனை என்றாலும் PF பணத்தை எடுக்கலாம். திருமணம் என்றாலும் பணத்தை எடுக்கலாம் அல்லது உறுப்பினரின் குழந்தைக்கான கல்வி செலவுக்கு பணம் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.
இது தவிர இயற்கை பேரழிவு ஊனமுற்ற நபராக இருந்தால் உபகரணங்கள் வாங்க என சில காரணங்களுக்காக பிஎப் பணத்தை எடுக்கலாம். நீங்கள் 54 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ஓய்வு பெறுவதற்கு முன்பே பகுதியளவு பணத்தை கடன் பெறலாம்.
எனவே பிஎஃப் பணத்தை திரும்ப பெறும்போது மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் சரி பார்த்துக் கொள்வது அவசியம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications