ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து பங்களிக்கும் அதன் உறுப்பினர்களுக்கு சுமார் ரூ. 7 லட்சம் வரையிலான காப்பீட்டை வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் காப்பீட்டைப் பெற உறுப்பினர்கள் பிரீமியம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் மாத சம்பளக்காரர்களாகத் தான் உள்ளனர். எனவே EPFO அமைப்பு பல்வேறு முக்கியமான சலுகைகளையும் அதன் உறுப்பினர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் வழங்கி வருகிறது. இதில் முக்கியமான சலுகை தான் Employees' Deposit Linked Insurance (EDLI) திட்டம்.
அடிப்படைச் சம்பளம் ரூ.15,000-க்கு மேல் உள்ள உறுப்பினர்கள், அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரையிலான காப்பீட்டுப் பலனை இதன் மூலம் பெறலாம். இந்தத் திட்டத்தின் அம்சங்கள் மற்றும் எப்படி பெறுவது என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO EDLI திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: EPFO உறுப்பினர்கள் இந்தக் காப்பீட்டிற்கு பிரீமியம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. க்ளைம் தொகையானது EPF உறுப்பினர்களின் முந்தைய 12 மாதங்களுக்கான சராசரி மாத ஊதியத்தை விட 35 மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது, அதாவது அதிகபட்சம் ரூ.7 லட்சம் வரை காப்பீடு பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் ரூ.1,50,000 லட்சம் வழங்கப்பட்ட போனஸ் தொகை, ஏப்ரல் 28, 2021 முதல் ரூ.1.75 லட்சமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.
EPFO EDLI இன்சூரன்ஸ் கணக்கீடு: அனைத்து ஊழியர்களும் ரூ. 7 லட்சம் க்ளைம் தொகையைப் பெற முடியாது. ஆனால் காப்பீடு கீழே உள்ள ஃபார்முலாவின் படி கணக்கிடப்படுகிறது.
காப்பீட்டுத் தொகையானது கடந்த 12 மாதங்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் DA-வைப் பொறுத்தது. காப்பீட்டுத் தொகை அவர்களின் கடைசி அடிப்படை சம்பளம் + DA-வை விட 35 மடங்கு அதிகமாக இருக்கும். இது தவிர, 1,75,000 ரூபாய் வரை போனஸ் தொகையும் EPFO உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகிறது.
உதாரணமாக, ஒரு ஊழியரின் கடந்த 12 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம் + DA இரண்டும் சேர்த்து ரூ.15,000 எனில்,
காப்பீட்டுக் கோரிக்கைத் தொகை (35 x 15,000) + 1,75,000 = ரூ. 7,00,000 ஆக இருக்கும்.
EPFO EDLI இன்சூரன்ஸ்-ஐ பெறுவது எப்படி?: EPF உறுப்பினர் அகால மரணமடையும் போது, அவரின் நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். பரிந்துரைக்கப்பட்ட நாமினி 18 வயது பூர்த்தி பெற்றிருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால், அவர் சார்பாக அவரின் பெற்றோர்கள் உரிமை கோரலாம்.
இறப்பு சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ் போன்ற ஆவணங்கள் இதற்கு தேவைப்படும்.
ஒரு மைனரின் பாதுகாவலர் காப்பீட்டைக் கோரினால், பாதுகாவலர் சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications