PF கணக்கு வச்சிருக்கீங்களா? நோட் பண்ணிக்கோங்க இந்த 3 நாட்களுக்கு EPFO இணையதளம் செயல்படாது..!!

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் பின்வரக்கூடிய 3 நாட்களுக்கு பிஎஃப் இணையதளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிஎஃப் கணக்கில் ஆன்லைன் சேவைகள் ஏதேனும் பெற வேண்டும் என்றால் இன்றைக்குள் பெற்று கொள்ளுங்கள். ஏனெனில் குறிப்பிட்ட 3 நாட்களுக்கு பிஎஃப் இணையதளம் செயல்படாது.

EPFO எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் தனது இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தளங்களை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளதால், 3 நாட்களுக்கு பிஎஃப் இணையதளம் செயல்படாது என அறிவித்துள்ளது. இதன்படி ஜூன் 26ஆம் தேதி தொடங்கும் நள்ளிரவு 12:00 மணி (00:00 hours) முதல், ஜூன் 28, இரவு 11:59 மணி (23:59 hours) வரை பிஎஃப் இணையதளம் செயல்படாமல் இருக்கும். அதாவது வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தச் சேவைகள் கிடைக்காது.

PF கணக்கு வச்சிருக்கீங்களா? நோட் பண்ணிக்கோங்க இந்த 3 நாட்களுக்கு EPFO இணையதளம் செயல்படாது..!!

ஜூன் 29ஆம் தேதி தொடங்கும் நள்ளிரவு 12:00 மணி முதல் இணையதளம் வழக்கம்போல் முழுமையாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 3 நாட்களுக்கு EPFO போர்ட்டலில் கீழ்க்கண்ட பணிகளைச் செய்ய முடியாது:

· புதிய க்ளைம்கள் (Claim Requests) அதாவது பணம் எடுப்பதற்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க முடியாது.

· ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட க்ளைம்களை பரிசீலிக்கும் (Processing) பணிகளும் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதாவது ஜூன் 29க்கு பின்னரே பரிசீலனை செய்யப்படும்.

Also Read

இணையதளம் செயல்படாத இந்த நாட்களில், உங்கள் கணக்கு பேலன்ஸ் மற்றும் பாஸ்புக்கை கூட சரிபார்க்க முடியாது. எனவே மாற்று வழிகளைப் பயன்படுத்தலாம்:

உமாங் செயலி (Umang App): மொபைலில் இந்த செயலியை டவுன்லோடு செய்து, உங்கள் UAN மற்றும் மொபைல் எண்ணிற்கு வரும் OTP மூலம் லாகின் செய்து விவரங்களை அறியலாம்.

இல்லையெனில் உங்கள் EPFO கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால், எஸ்.எம்.எஸ் மூலம் பேலன்ஸ் விவரம் வரும்.

உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து EPFOHO UAN TAM என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு அனுப்பினால், தமிழ் மொழியிலேயே உங்கள் பிஎஃப் விபரங்களைப் பெறலாம்.

Recommended For You

EPFO-ன் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்கள் மூலமும் தகவல்களைப் பெற முடியும். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், பிஎஃப் அமைப்பின் ஹெல்ப்லைன் எண்ணான 14470-ஐ தொடர்பு கொள்ளலாம். பயனாளர்களுக்குச் சிறந்த மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதற்காகவே இந்தத் தற்காலிக மேம்பாட்டுப் பணி செய்யப்படுவதாக EPFO தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+