ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) ஒரு நபர் நிறுவனத்தில் பணி புரியும் வரை அவருடைய முதலாளி மற்றும் பணிபுரியும் ஊழியர் இருவரும் சேர்ந்து மாத மாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் அந்த ஊழியர் கணிசமாக சேமிக்க முடியும். EPF திட்டத்திற்கு 8.25 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. EPFO விதிகளின்படி, தொழிலாளி தனது அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 12% தொகையை EPF-இல் செலுத்த வேண்டும். தொழிலாளியின் பங்கை சமன்ப்படுத்த முதலாளியும் 12% தொகையை செலுத்த வேண்டும். இதில் 8.33% EPS-க்கும், 3.67% EPF-க்கும் செலுத்தப்படும்.
இப்படி சேர்த்து வைத்த தொகையை பெறுவதில் சிலர் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தங்களுடைய EPF கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து சிலர் தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

பொதுவாக ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது இந்த இபிஎப் தொகையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக வருங்கால வைப்பு நிதி கார்பஸில் பகுதி அளவு தொகையை எடுத்துக் கொள்ள முடியும். இந்த தொகை உறுப்பினர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும். ஆனால் அதற்கு குறைந்தது 10 நாட்கள் வரை எடுக்கலாம். இது தவிர உங்களுடைய கோரிக்கை பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்படுவதற்குவாய்ப்புண்டு.
உங்கள் கோரிக்கை ஏன் EPFO அமைப்பால் நிராகரிக்கப்படுகிறது?: உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுய்வதற்கான பொதுவான காராணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முழுமையற்ற KYC
ஆதாருடன் UAN நம்பரை இணைக்காமல் இருத்தல்
பெயர், பிறந்த தேதியில் மாற்றங்கள்
EPFO பதிவுகளுடன் UAN நம்பர் பொருந்தாமல் இருத்தல்
நிறுவனத்தில் சேர்ந்த மற்றும் வெளியேறும் தேதி சரியாக இல்லாமை
தவறானநிறுவனத்தின் பெயர், குறியீடு மற்றும் இதர விவரங்கள்
தவறான வங்கி கணக்கு விவரங்கள். உதாரணமாக கணக்கு எண், IFSC குறியீடு, கிளை பெயர்
உரிமைகோரல் சமர்ப்பிக்கும் படிவத்தில் பிழைகள்
தகுதியற்ற EPS கணக்கு (மாதாந்திர அடிப்படை சம்பளம் ரூ.15,000க்கு மேல்)
மேலே கூறப்பட்டுள்ள காரணங்களுக்காக உங்களுடைய EPF கோரிக்கை நிராகரிக்கப்படலாம். அவற்றை எப்படி சரி செய்வது என்பதைப் பார்ப்போம்.
EPFO பதிவுகளுக்கும் உங்கள் ஆதார் தகவல்களுக்கும் இடையில் ஏதேனும் பொருந்தாத விவரங்கள் உள்ளதா? என்பதைச் சரி பறக்கவும்.
ஆதாருடன் UAN நம்பரை இணைக்கவும். ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலில் உள்ளதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
PF பரிந்துரைகளை புதுப்பிக்கவும். ஏதேனும் பிழைகள் உள்ளதா என உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை இருமுறை சரிபார்க்கவும்.
உங்கள் உரிமைகோரல் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், உன்னிப்பாக அனைத்து தகவல்களையும் மதிப்பாய்வு செய்யவும். சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களின் நகல்களையும் பராமரிக்கவும்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications