ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தங்கள் உறுப்பினர்களின் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக கவனிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரையில் PF பணத்தை எடுப்பதில் பல சிக்கல்கள் இருந்தது. உறுப்பினர்கள் பிஎஃப் தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்த விட்டு 6 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக EPFO அமைப்பு யூபிஐ சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஏற்கனவே இந்த சேவையின் இறுதி கட்ட டெஸ்டிங் ப்ராசஸ் முடிந்துவிட்டதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். எனவே விரைவில் யூபிஐ சேவை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக தற்போது 100 சதவீதம் வரை பிஎஃப் தொகையை திரும்ப பெறுவதிலும் ஒரு சில தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
EPFO உறுப்பினர்கள் அனைவராலும் பிஎஃப் தொகையை மொத்தமாக எடுக்க முடியாது. ஆனால் ஒரு சில சூழ்நிலைகளின் போது நீங்கள் 100% வரை உங்கள் PF சேமிப்பை எடுத்துக் கொள்ளலாம். பெரும்பாலானோருக்கு பிஎஃப் தொகை தான் முதன்மை சேமிப்பாக இருக்கிறது. அப்படி இருக்கையில் அவசர காலம் ஏற்படும்போது வேறு எங்கும் சென்று பணத்தை தயார் செய்ய முடிவதில்லை. இது போன்ற இக்கட்டான இக்கட்டான நேரத்தில் 100% வரை நீங்கள் EPF தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

பழைய விதி என்ன?: தற்போதைய நடைமுறையின் படி இயற்கை பேரிடர், பெருந்தொற்று, வேலையின்மை போன்ற காரணங்களுக்கு நீங்கள் 100% வரை பிஎஃப் தொகையை எடுக்க முடியும். ஆனால் எதற்காக பிஎஃப் தொகையை எடுக்கிறீர்கள் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஒரு சில சந்தர்ப்பங்களில் உறுப்பினர்கள் குறிப்பிடும் காரணம் இபிஎஃப்ஓ அமைப்பின் பட்டியலில் இல்லாமல் இருந்தால், பணம் திரும்பப் பெரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.
புதிய விதிமுறை என்ன?: உறுப்பினர்களின் கோரிக்கைகள் அவசர பணத் தேவையின்போது நிதிநிராகரிக்கப்படுவதைத் தெரிந்து கொண்டு கடந்த அக்டோபர் 2025-ஆம் ஆண்டில் அரசு சார்பில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், "முன்புவரை ஒரு சில சூழ்நிலைகளின் போது பகுதியளவு பிஎஃப் தொகையை பெறுவதற்கான காரணங்களை உறுப்பினர்கள் கூற வேண்டும். இதனால் பெரும்பாலான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது. ஆனால் இனிமேல் இது போன்ற காரணங்களை நீங்கள் கூறத் தேவையில்லை. காரணங்கள் சொல்லாமலேயே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்", என்று கூறப்பட்டிருந்தது.
அரசின் புதிய விதிமுறையின் கீழ் உங்களுடைய நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டு உங்களுக்கு சம்பளம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நீங்கள் தாராளமாக உங்கள் முழு பிஎஃப் தொகையையும் எடுக்கலாம். மேலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் இருக்கும் போதும் 100 சதவீத பிஎஃப் தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
6 மாதங்களுக்கும் மேலாக உங்கள நிறுவனம் மூடப்பட்டு நீங்கள் மற்றொரு வேலையை கண்டுபிடிக்காமல் இருக்கும் பட்சத்திலும் முழு தொகையையும் எடுக்கலாம். அதேபோல உங்களுக்கு உங்கள் குடும்பத்தினருக்கும் கடுமையான நோய் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரங்களிலும் முழு பிஎப் பணத்தையும் எடுக்க முடியும்.
இப்படி எந்த காரணமும் இல்லாமல் PF தொகையை எடுக்க நினைப்பவர்கள் 75% வரை திரும்பப் பெறலாம். இதற்கு நீங்கள் எந்த ஒரு டாக்குமெண்டையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில் நல்ல விஷயம் என்னவென்றால் டாக்குமெண்ட் சரியில்லை, நீங்கள் சொல்லும் காரணம் சரியில்லை என்பதற்காக உங்களுடைய கிளைம் இனி நிராகரிக்கப்பட மாட்டாது. EPFO அமைப்பு கொண்டு வந்திருக்கும் இந்த புதிய விதிகள் நிச்சயம் அதன் உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சொந்த பணத்தையே அவசர தேவைக்கு எடுக்க அவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டது. இதையடுத்து இந்தப் பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications