இந்தியாவில் பெரும் பகுதி மக்கள் மாத சம்பளக்காரர்கள் தான், அதை உணர்ந்த இந்திய அரசு EPFO அமைப்பு மூலம் ஊழியர்களுக்கு EPF என்னும் முதலீட்டுத் திட்டம் மட்டும் அல்லாமல் பல்வேறு முக்கியமான சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதில் முக்கியமான சலுகை தான் Employees' Deposit Linked Insurance திட்டம்.
இத்திட்டம் மூலம் ஒவ்வொரு ஊழியருக்கும் எவ்விதமான ப்ரீமியம் தொகையும் செலுத்தாமல் சுமார் 7 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பை EPFO அமைப்பு அளிக்கிறது என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
EDLI இன்சூரன்ஸ் திட்டம்
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈபிஎப்ஓ அமைப்பு ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees' Deposit Linked Insurance (EDLI)) தொகையை 6 லட்சம் ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த EDLI இன்சூரன்ஸ் திட்டம் ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் தானாகவே அளிக்கப்படுகிறது.
7 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்
மேலும் இந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாதுகாப்பைப் பெற்ற ஊழியர் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்ய வேண்டியது இல்லை, ஆனால் நிறுவனம் ஊழியரின் மாத சம்பளத்தில் 0.5 சதவீதம் மட்டும் இத்திட்டத்திற்காகச் செலுத்த வேண்டும்.
பிஎப் கணக்காளர்
பிஎப் கணக்காளர் இயற்கையாகவோ, விபத்து மற்றும் உடல்நல கோளாறு காரணமாகவோ மரணம் அடைந்தால், நாமினியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரையிலான தொகை இந்த EDLI திட்டம் மூலம் கிடைக்கும்.
அனைவருக்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு
EPFO அமைப்புக் கீழ் இருக்கும் அனைத்து நிறுவனமும், Miscellaneous Provisions Act, 1952 கீழ் தானாகவே EDLI திட்டத்திற்குத் தகுதியானவர்களாக அரசு அறிவிக்கிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு உள்ள அனைவருக்கும் இந்த ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவார்கள், சுருக்கமாக உங்களுக்குப் பிஎப் கணக்கு இருந்தால் 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான EDLI இன்சூரன்ஸ் திட்டம் உறுதி.
2.5 - 7 லட்சம் ரூபாய்
இந்நிலையில் பிஎப் கணக்காளர் ஒருவர் இறந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகப்படியாக 7 லட்சம் ரூபாய் தொகையை EDLI திட்டம் வாயிலாகப் பெறுவார்கள். இது ஜூன் மாதத்திற்கு முன்பு வரை அதிகப்படியாக 6 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
12 மாதம் கட்டாயம்
மேலும் இந்தத் தொகை பெற ஒருவர் குறைந்தது 12 மாதம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தத் தொகையைப் பெறுவதற்குத் தகுதி அடையமாட்டார் எனத் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாமினேஷன்
மேலும் இந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் தொகை பிஎப் கணக்கில் நாமினேஷன் சரியாகவும், முறையாகவும் செய்யப்பட்டு இருந்தால், நாமினி வங்கி கணக்கில் நேரடியாகப் பெரும் வசதியை தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் நீங்கள் உங்கள் பிஎப் கணக்கிற்கு நாமினி செய்யவில்லை என்றாலும் இணையத்தின் வாயிலாகவே ஈ-நாமினேஷன் செய்ய முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications