ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடர்ந்து தங்கள் உறுப்பினர்களுக்காக பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் EPF பணம் எடுப்பதிலும் தற்போது சில மாற்றங்கள் வரவுள்ளன. இதற்கு முன்னர் இபிஎப் பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது உங்கள் வங்கி கணக்கு சரியானதா? என உறுதிப்படுத்த சில ஆவணங்கள் தேவைப்பட்டன.
குறிப்பாக உங்கள் பெயர் அச்சிடப்பட்ட செக் புத்தகம் அல்லது வங்கி அதிகாரி கையெழுத்திட்ட பாஸ்புக் தேவைப்படும். அதோடு உங்கள் வங்கி கணக்கை உங்கள் இபிஎப் கணக்குடன் இணைக்க நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் முதலாளி அனுமதி தேவைப்பட்டது. இப்போது அரசு இந்த இரண்டு நடைமுறைகளையும் எளிதாக்கியுள்ளது.

EPF கிளைம் செயல்முறை நிராகரிக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறை சிக்கலானதாகவும் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும் இருப்பதாக கஸ்டடியன் டாட் லைப்-இன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான குணால் கப்ரா கூறியுள்ளார்.
அதோடு ஏற்கனவே வங்கியில் KYC கட்டாயத் தேவையாக இருப்பதால் உரிமை கோரலின் போது காசோலை வழங்குவது தேவையற்ற செயல் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் கேஒய்சி சரிபார்ப்பு செய்யும்போதே வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் முகவரி போன்ற தகவல்கள் சரிபார்க்கப்படும். EPF பணத்தை எடுக்கும் போது ஏற்கனவே கேஒய்சி சரிபார்ப்பு முடிந்த வங்கி கணக்கை வைத்திருந்தால் எளிதாக பணம் பெறலாம். இது தேவையற்ற பணிச்சுமையை குறைக்க உதவும்.
தற்போது இந்த சரிபார்ப்பு செயல்முறை நீக்கப்படுவதால்.. இதனால் மோசடிகள் நடைபெறும் வாய்ப்புள்ளது. எனவே EPFO அமைப்பு தனது உறுப்பினர்களின் பணத்தை பாதுகாக்க புதிய செயல் முறையை கொண்டு வர வேண்டும் என்றும் கப்ரா கூறியுள்ளார்.
EPFO அமைப்பு வங்கி கணக்கையும், UAN நம்பரையும் சரிபார்க்க NPCI தளத்தைப் பயன்படுத்தி வருகிறது. NPCI இந்தியாவில் பணப்பரிவர்த்தனை மற்றும் வங்கி கணக்கு பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு அமைப்பு. இதன் மூலம் வங்கி கணக்கு சரியாக உள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்க முடியும்.
இந்த சரிபார்ப்பு வங்கி கணக்கு மற்றும் UAN ஆகிய இரண்டும் ஒரே நபருக்கு உரியதா? என்பதை உறுதிப்படுத்தும். எனவே EPFO அமைப்பு உறுப்பினர்களின் பணம் மோசடியாக வெளியேறாமல் பாதுகாக்க ஒரு வலுவான செயல்முறையை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications