ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பை மாற்றும்போது EPF டிரான்ஸ்ஃபர் கோரிக்கையை எளிதாக்கும் புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டின் மே 20-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் ட்ரான்ஸ்பர் க்ளைம் தொடர்பான விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஓவர்லாப்பிங் காரணமாக பல கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இது போன்ற சிக்கலுக்கு தீர்வளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ட்ரான்ஸ்ஃபர் கிளைம் என்றால் என்ன?: ஒரு ஊழியர் ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும் போது பழைய நிறுவனத்தின் PF பேலன்ஸை புது நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். இதைத்தான் ட்ரான்ஸ்ஃபர் க்ளைம் என்று கூறுகின்றனர். ஆனால் பல சந்தர்ப்பங்களில் ஓவர்லாப்பிங் சேவை காரணமாக கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.

அதாவது பழைய நிறுவனத்தில் பணிபுரியும் போது நிறுவனத்தை விட்டு வெளியேறினால் நோட்டீஸ் பீரியடை கடந்து தான் வெளியேற வேண்டும். அப்படி இருக்கையில் ஒரு நிறுவனத்தின் பணி புரிந்த கடைசி தேதியும் மற்றொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த முதல் தேதியும் ஒன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இது சில நேரங்களில் கோரிக்கை நிராகரிப்புக்கு வழிவகுக்கிறது. ஆனால் ஓவர்லாப்பிங் காரணமாக EPF ட்ரான்ஸ்ஃபர் கிளைம் கோரிக்கைகள் நிராகரிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழிகாட்டுதல்களை EPFO அமைப்பு வெளியிட்டுள்ளது.
ஓவர்லாப்பிங் சேவை காலங்கள் காரணமாக பல அலுவலகங்களில் டிரான்ஸ்பர் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. இதனை தடுப்பதற்காக இபிஎப்ஓ அமைப்பு உண்மையான காரணங்களுக்காக கூட இது போன்ற ஓவர்லாப்பிங் நிகழலாம் என்றும் இதை காரணமாக வைத்து கோரிக்கைகளை நிராகரிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் PF பணம் எடுக்கும் செயல்முறையிலிருந்து EPF ட்ரான்ஸ்ஃபர் செய்யும் செயல்முறை வரை அனைத்தும் சிக்கலானதாக இருந்தது. ஆனால் தற்போது எல்லாவற்றையும் டிஜிட்டல் மையமாக்கி அனைத்து செயல்முறைகளையும் எளிதாக்கும் வகையில் EPFO அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற ஜூன் மாதம் முதல் ஏடிஎம்மில் இருந்து PF பணம் எடுக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. இதனால் பேலன்ஸ் விவரங்களைத் தெரிந்து கொள்வது முதல் பணம் எடுப்பது வரை அனைத்தையும் எளிதில் செய்ய முடியும்.எது எப்படியோ இபிஎப்ஓ அமைப்பின் கீழ் இருக்கும் கோடிக்கணக்கான உறுப்பினர்களுக்கு முன்பு இருந்ததை விட அனைத்து செயல்முறைகளும் எளிதாகியுள்ளது பாராட்டத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications