நீண்ட நாட்களாக PF தொகையை திரும்ப பெறுவது சிக்கலான நடைமுறையாக இருந்து வந்தது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வந்தது. அதன்படி இனி பிஎஃப் தொகையை பெற விரும்பும் உறுப்பினர்கள் அதே நாளில் அல்லது அதிகபட்சமாக 2 நாட்களுக்குள் பணத்தை திரும்ப பெறலாம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று EPFO அமைப்பு தெரிவித்திருக்கிறது.
புது டெல்லியில் நடைபெற்ற தொழில்துறை உச்சி மாநாட்டில் உரையாற்றிய சென்ட்ரல் பிராவிடண்ட் ஃபண்ட் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதோடு ஏற்கனவே நிலுவையில் இருந்த விண்ணப்பங்களும் முடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
இனி பிஎஃப் செட்டில்மெண்ட் கிட்டத்தட்ட 90% வரை ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட் முறையில் வழங்கப்படும். எனவே உறுப்பினர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் அதே நாளில் அல்லது அதிலிருந்து இரண்டு நாட்களுக்குள் ப்ராசஸ் செய்யப்பட்டு விடும்.

இதற்கு முன்னர் வரை கேஒய்சி விவரங்கள் சரியாக இருந்தாலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து விட்டு பணம் வருமா? வராதா? என 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது தங்களுடைய டிஜிட்டல் கட்டமைப்பை EPFO அமைப்பு மேம்படுத்தி வருகிறது. இதனால் பணம் எடுக்கும் செயல்முறை முதல் அக்கவுண்ட் ஆக்டிவேஷன் செயல்முறை வரை அனைத்தையும் உறுப்பினர்கள் விரைவாகப் பெற முடியும்.
இனி யூபிஐ மூலம் PF பணம்: இன்னும் 1 மாதத்திற்குள் BHIM ஆப் மூலம் PF பணத்தை எடுக்கும் வசதியை EPFO அமைப்பு அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் மூலம் உறுப்பினர்கள் அவர்களுடைய பிஎஃப் பணத்தை எளிதில் யுபிஐ மூலம் ஒரு சில க்ளிக்குகளில் எடுக்க முடியும். அப்படி எடுக்கப்படும் தொகை நேரடியாக அவர்கள் வழங்கி இருக்கும் வங்கி கணக்கிற்கு சென்று விடும். இந்த வசதி அதிகபட்சமாக இன்னும் 1 மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்றும் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
8.25% வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா?: தற்போது EPFO உறுப்பினர்களுக்கு 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கும் கிருஷ்ணமூர்த்தி பதிலளித்தார். இது குறித்து இப்போது சொல்ல முடியாது .ஜூலை 3-ஆம் தேதிக்குப் பிறகு EPFO அமைப்பின் கீழ் இருக்கும் 34 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களின் கணக்குகளில் 8.25% வட்டி விகிதம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி வட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
