பணி புரியும் ஊழியர்களுக்கு EPFO கணக்கு இருக்கும். அப்படி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு PF தொகை டெபாசிட் செய்யப்படும். இதில் 12 சதவீதம் ஊழியர் பங்களிக்க வேண்டும். மீதமுள்ள 12 சதவீதம் நிறுவனத்தின் சார்பில் டெபாசிட் செய்யப்படும். இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது.
இப்படி டெபாசிட் செய்யப்படும் பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் நீங்கள் ஆன்லைனில் பெற முடியும். உதாரணமாக உங்களுடைய PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை ஆன்லைனில் சரி பார்க்கலாம். இந்த பதிவில் அது குறித்த விவரங்களை பார்ப்போம்.

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிரத்தியேகமாக UAN நம்பர் வழங்கப்படும். இந்த நம்பர் இருந்தால் போதும் பிஎஃப் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை வீட்டிலிருந்தே சரி பார்க்க முடியும். கீழ்காணும் ஸ்டெப்ஸ்களைப் பின்பற்றி எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
ஸ்டெப் 1: முதலில் EPFO அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஸ்டெப் 2: அடுத்ததாக "Our Services" என்ற செக்சனுக்கு சென்று "For Employees" என்பதை கிளிக் செய்யவும். பிறகு மெம்பர் பாஸ்புக் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: தற்போது உங்களுடைய UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை வழங்கவும். நீங்கள் லாகின் செய்ததும் உங்களுடைய பாஸ்புக், PF தொகை, எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டது? என்பன போன்ற விவரங்கள் அனைத்தும் காண்பிக்கப்படும்.
SMS மூலம் PF பேலன்ஸ்-ஐ பெறுவது எப்படி?: PF பேலன்ஸ்-ஐ SMS மூலம் தெரிந்துகொள்ள கண்டிப்பாக உங்கள் UAN நம்பர் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நம்பரை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று வேறு ஒரு பதிவில் கொடுத்துள்ளோம். அதற்கு EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
மிஸ்டு கால் மூலம் PF பேலன்ஸ்-ஐ எப்படி சரிபார்ப்பது?: மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ்-ஐ சரிபார்க்கும் வசதியையும் EPFO அமைப்பு வழங்கியுள்ளது. இதற்கு உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF பேலன்ஸ் அனுப்பப்படும்.
UMANG அப்ளிகேஷன் மூலம் PF பேலன்ஸ்-ஐ தெரிந்துகொள்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் UMANG அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: EPFO என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.
ஸ்டெப் 3: "Employee-Centric Services" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: உங்கள் UAN நம்பர் மற்றும் OTP-ஐ வழங்கவும்.
தற்போது நீங்கள் உங்கள் PF பேலன்ஸ் மற்றும் பிற விவரங்களைச் சரிபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications