PF சந்தாதாரர்களின் கணக்கில் சரியான நேரத்தில் பணம் வந்து சேர்ந்ததா என்பதை அறிய, ரியல்டைம் கண்காணிப்பு அம்சத்தை EPFO அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நீண்டகால புகார்களுக்கான தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி நிறுவனங்கள் அதன் தொகையை டெபாசிட் செய்தவுடன் ஊழியர்கள் எஸ்எம்எஸ் அலர்ட்களை பெறலாம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. பிஎஃப் கணக்கில் உள்ள தொகை குறித்து பல நிறுவனங்கள் பல்வேறு முறைகேடுகளை செய்வதாக புகார் எழுந்தது. இதற்கு தீர்வாக, ரியல்டைம் எஸ்எம்எஸ் எச்சரிக்கை முறையை அமல்படுத்த, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டமிட்டுள்ளது.

சமீபத்தில், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் மற்றும் நிறுவனத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்தது. வருங்கால வைப்பு நிதி நிலுவைத் தொகை தொடர்பாக மோசடி மற்றும் குற்றச் சதி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க EPFO புதிய அமைப்பைக் கொண்டு வருகிறது. நிறுவனத்தின் முதலாளிகள் EPFO சந்தாதாரர் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யும் போதெல்லாம், ஊழியர்களுக்கு ரியல்டைம் SMS கிடைக்கும். ஊழியரின் மொபைல் போனில் எஸ்எம்எஸ் வந்தால் அந்த நிறுவனம் அந்த பணத்தை ஊழியரின் தகுதியான பிஎஃப் கணக்கிற்கு செலுத்துகிறது என்று அர்த்தம்.
தற்போது, பல பிஎஃப் சந்தாதாரர்களுக்கு நிறுவனம் தங்கள் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்ததா என்பது தெரியாது என்பதுதான் உண்மை. பல்வேறு வழிகளில் பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க முடியும் என்றாலும், பிஎஃப் வைப்புகளின் நிலையைக் கண்காணிப்பதற்கான ரியல்டைம் தீர்வுகள் இதுவரை இல்லை.
அந்த வகையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, வங்கிகளில் உள்ளதைப் போன்ற ஒரு அமைப்பை இது தயாரிக்கும் நோக்கம் கொண்டது. தற்போது நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பை பிடித்தம் செய்து வருகின்றன. ஆனால் பல நிறுவனங்கள் இந்தத் தொகையை குறித்த நேரத்தில் ஊழியரின் பிஎஃப் கணக்கில் வரவு வைப்பதில்லை. இது ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இது தொடர்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அதே நேரத்தில், பிஎஃப் கணக்கில் பேலன்ஸ் தொகையை தெரிந்துகொள்ள நான்கு சுலபமான வழிகள் உள்ளன. EPFO உறுப்பினர் போர்ட்டலில் லாகின் செய்யலாம். UMANG செயலியை பயன்படுத்தி பேலன்ஸ் செக் செய்யலாம், SMS மூலம் பேலன்ஸ் செக் செய்யலாம் மற்றும் மிஸ்டு கால் சேவை மூலம் பேலன்ஸை சரிபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications